உங்கள் உடலைப் பற்றிய ஆச்சரியமான விஷயங்கள்: தும்மல் எலும்பை உடைத்துவிடும் தெரியுமா
Most Weirdest Facts Trivia: உங்கள் உடலைக் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகள் விசித்திரமானவோ அல்லது வேடிக்கையானதாகவோ இருக்கும்
Fun Facts of Human Body: மிகவும் விசித்திரமான உண்மைகள்: நாம் அனைவரும் குழந்தை பருவத்திலிருந்தே நம் உடலைப் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். சில சமயங்களில் அறிவியல் புத்தகத்தில் இருந்தும், சில சமயம் பொது அறிவு புத்தகத்திலிருந்தும், சில சமயம் டிவி மூலம் மனித உடலைப் பற்றி தெரிந்து கொள்கிறோம்.
சில சமயங்களில் நாமே சில விஷயங்களை அனுபவித்து உணர்ந்துக் கொள்வோம். ஆனால் பல சமயங்களில் நமது உடலைப் பற்றிய விஷயங்கள் உண்மையென்றாலும் நம்மால் நம்ப முடியாது.
உடலைக் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகள் விசித்திரமானவோ அல்லது வேடிக்கையானதாகவோ இருக்கும். அதேபோல சில நிதர்சனமான உண்மைகள் மகிழ்ச்சியும் ஏற்படலாம்.
மேலும் படிக்க | குழந்தைகளுக்கு ஜலதோஷ பிரச்சனையா? எளிய வீட்டு வைத்தியங்கள்
உமிழ்நீர்
ஒரு மனிதனுக்கு தினசரி சுமார் 2 முதல் 4 சிட்டிகை உமிழ்நீரை உற்பத்தியாகிறது தெரியுமா? உங்கள் மூக்கை அழுத்தி பிடித்துக் கொண்டு பேச முயற்சித்து பார்த்ததுண்டா? அது முடியாது என்பது ஆச்சரியமான விஷயம்.
தும்மினால் எலும்பு முறிவு ஏற்படுமா?
மிகவும் தீவிரமாக தும்மினால் விலா எலும்புகளுக்கு சேதம் ஏற்படலாம், எலும்பு முறிவுகள் கூட ஏற்படலாம் என்று தெரியுமா? எனவே தான் சிறு அளவில் தும்மல் வந்தால் பரவாயில்லை, ஆனால் தும்மலை அடக்கக்கூடாது. தொடர்ந்து தும்மல் வருவது ஒரு விதமான வியாதி.
ஒவ்வொரு நபரின் கைரேகைகளும் வித்தியாசமாக இருக்கும் என்பது தெரியும், ஆனால், ஒவ்வொரு நபரின் நாக்கின் அமைப்பும் வித்தியாசமானது என்பது உங்களுக்குத் தெரியுமா?
மேலும் படிக்க | காளானில் இருக்கு எக்கச்சக்க நன்மைகள்
உண்ண உணவு இல்லையென்றால் மரணம் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், உண்மையால், பசியைக் கூட தாங்கிக் கொண்ட ஓரளவு வாழ்ந்துவிடலாம். ஆனால், தூக்கம் இல்லாவிட்டால் அது விரைவில் மரணத்தை தந்துவிடும்.
மனிதனுக்கும் வாழைப்பழத்தின் மரபணுவிற்கும் இடையிலான ஒற்றுமை 60% க்கும் அதிகமாக உள்ளது. இதை 'டைம்ஸ் நவ்' நாளிதழ் வெளியிட்டுள்ளது. பலருக்குத் தெரியாத சில வேடிக்கையான உண்மைகள் இவை.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ளாது.)
மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ