குரு வக்ர பெயர்ச்சி: ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம்

Guru Vakri 2022: குரு வக்ர பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ஏற்படும். குருவின் இந்த மாற்றம் சில ராசிகளுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 21, 2022, 11:44 AM IST
  • வியாழன் கிரகத்தின் பிற்போக்கு நிலை துலாம் ராசியினருக்கு நன்மை அளிக்காது.
  • இந்த காலகட்டத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • உங்கள் எதிரிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குரு வக்ர பெயர்ச்சி: ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம் title=

குரு வக்ரி 2022: ஜோதிடத்தின் படி, தேவகுரு வியாழனின் பிற்போக்கு இயக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜூலை 29 அன்று, வியாழன் கிரகம் அதன் சொந்த ராசியான மீனத்தில் பிற்போக்குத்தனமாக நகர்வார். வியாழனின் பிற்போக்கு நிலை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குரு வக்ர பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ஏற்படும். ஜூலை 29 முதல் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இவர்கள் நிதி சிக்கல்களையும் சந்திக்க வேண்டிவரும். 

சிம்மம்:

சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த காலகட்டத்தில் நீங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பொருளாதார ரீதியாக நீங்கள் போட்டுள்ள திட்டங்களில் பாதிப்புகள் வரக்கூடும். இதன் காரணமாக கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரலாம். பண விஷயத்தில் இந்த காலத்தில் மிக கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களுக்கு அடுத்த 20 நாட்கள் பண மழை பொழியும் 

துலாம்:

வியாழன் கிரகத்தின் பிற்போக்கு நிலை துலாம் ராசியினருக்கு நன்மை அளிக்காது. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எதிரிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தேவையற்ற செலவுகள் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும்.

இந்த காலத்தில் பண விஷயத்தில் சிக்கனமாக இருங்கள். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நேரம் இது. குடும்ப உறுப்பினர்களுடன் அமைதியாக பேசுங்கள். வீண் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும்.

மகரம்:

மகர ராசியின் அதிபதி சனி தேவன் ஆவார். வியாழன் கிரகத்தின் தலைகீழ் இயக்கம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் அவசர முடிவுகளை எடுத்து பணத்தை இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்கார்ரகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. இவர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மரியாதை அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம். பண விவகாரத்திலும், பிற வியாபாரிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குருவின் அருளால் 22 ஏப்ரல் 2023 வரை இந்த ராசிகளின் வாழ்க்கை அமோகமாக இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News