தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. எப்போதும் மழை பெய்கையில் வீட்டில் இருக்கும் போது நமக்கு ஏதேனும் திண்பண்டங்கள் சாப்பிட வேண்டும் போல இருக்கும். அப்பிடி, ஸ்நாக்ஸ் க்ரேவிங்க்ஸ் இருக்கையில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய சில ஸ்நாக்ஸ் பொருட்களை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.க்ரில்டு சீஸ்:


சாண்ட்விச் ஸ்நாக்ஸ் பொருட்களை யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் க்ரில்டு சீஸ் என்றால் கேட்கவா வேண்டும்? இந்த உணவுடன் தக்காளி சாஸை சேர்த்து சாப்பிட்டால் அம்புட்டு ருசியாக இருக்கும். மேலை நாட்டு ஸ்நாக்ஸ்தான் என்றாலும் இந்தியாவில் இது ரொம்ப ஃபேமஸ். மேலும், இருப்பதிலேயே மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் வகைகளுள் ஒன்று இது. இதை செய்ய ப்ரெட், சில காய்கறிகள், தேவைப்பட்டால் சீஸ் உள்ளிட்டவை போதும். ஹெல்தி உணவுகளை சாப்பிட விரும்புவோர் குடை மிளகாய், தக்காளி, கேரட் உள்ளிட்ட காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம். 


2.சாக்லேட் சிப் பிஸ்கட்டுகள்:


சாக்லேட் சிப் பிஸ்கட்டுகளை மழை நாளில் மட்டுமல்ல, எந்த நாளில் வேண்டுமானாலும் விரும்பி சாப்பிடலாம். ஹோம் மேட் பிஸ்கட்டுகள் செய்ய, இணையத்தில் பல ரெசிப்பிகள் இருக்கின்றன. க்ரிஸ்பியாக சாப்பிட விரும்பினாலும், நன்கு சுவையாக சாப்பிட விரும்பினாலும் நமக்கு ஏற்றார் போல வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இதை செய்ய, பேக்கிங் சோடா, கார்ன் ஸ்கார்ச்ஹ், மைதா, சாக்லேட் சிப்ஸ் உள்ளிட்டவை தேவைப்படும். பால் கூட நமது தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளலாம். 



மேலும் படிக்க | தொங்கும் தொப்பையை ஓட ஓட விரட்டலாம்.. 'இதை' மட்டும் சாப்பிட்டால் போதும்


3.பாப்கார்ன்:


சிம்பிளான ஆனால் வயிற்றை நிரப்பக்கூடிய ஸ்நாக்ஸ் உணவுகளுள் ஒன்று, பாப்கார்ன். உப்பு போட்ட பொருள் சாப்பிட வேண்டும் போல இருந்தாலும், மசாலா போன்ற பொருட்களை சாப்பிட விரும்பினாலும் பாப்கார்ன் அதற்கு சிறந்த தேர்வாக அமையும். இதில், பல வகைகளும் உண்டு. சீஸ் அல்லது காரமான மசாலாக்களை வேண்டுமானால் தூவிக்கொள்ளலாம். பாப்கார்னை செய்வதற்கென்று கெர்னல்ஸ் விற்கப்படுகிறது. இதை குக்கரில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். கொஞ்சம் எண்ணெய், வெண்ணெய் ஆகியவையும் இதற்கு தேவைப்படலாம். 


4.ஹாட் கோக்கோ:


சாக்லேட்டை பல வடிவங்களில் நாம் சாப்பிட்டு மகிழ்ந்து வருகிறோம். காஃபி பிரியர்கள் நம் ஊரில் பலர் உள்ளனர். சூடாக எதையாவது குடிக்க விரும்பினால், சுவையான ஹாட் கோக்கோ அதற்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதை செய்ய, காபி தூள், கோக்கோ பவுடர், பால் மற்றும் தண்ணீர் ஆகியவை தேவைப்படும். மழை நாளில் குளிரை சமாளிக்க இதை நீங்கள் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். 


5.சூப் வகைகள்:


சளியை சமாளிக்க, குளிரை சமாளிக்க பல ஹெல்தியான ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான், சூப் வகைகளும். நீங்கள் அசைவ வகை சூப்களை குடிக்க நினைத்தாலும், காய்கறி பாேட்ட சூப்களை குடிக்க நினைத்தாலும் கண்டிப்பாக நீங்கள் அதில் சேர்க்க வேண்டியது ஒன்று இருக்கிறது. மிளகு தூள் அல்லது மிளகினை அதிகமாக நீங்கள் குடிக்கும் சூப்பில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் உடலில் ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை சமாளிக்கலாம். 


மேலும் படிக்க | கிறிஸ்துமஸுக்கு டூர் செல்ல பிளானிங்கா? ரயில்வே வெளியிட்ட செம பேக்கேஜ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ