புதுடெல்லி: பத்து தலைகளுக்கு சொந்தக்காரன், பரமேசுவரனின் பரம பக்தன்….


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலைகளின் காதலன், மலையினைப் போன்றவன்….


மக்களின் காவலன், மண்டோதரியின் நாயகன்….


வித்தைகளின் வித்தகன், மாயாஜாலங்களின் மன்னவன்….


இலங்கையின் தூணவன், அவன் பெயர் ராவணன்!!


ராமாயணத்தில் (Ramayan) வில்லனாக நமக்குத் தெரிந்த ராவணனுக்குள்ளும் பல அரிய குணங்கள் இருந்தன. ஒரு பொல்லாத மற்றும் திமிர்பிடித்த அரசனாக இருந்ததோடு, இராவணன் ஒரு சிறந்த ஞானியாகவும் பண்டிதராகவும் இருந்தார்.


அனைத்து துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்த ராவணன் ஒரு திறமையான அரசியல்வாதி, தளபதி மற்றும் கட்டிடக்கலை வல்லுநர் என்பது பலருக்குத் தெரியாது. அனைத்து வகையான தந்திர நுட்பங்களையும் அவர் அறிந்திருந்தார். இந்திரஜாலம், தந்திரம், வசியம், மாயாஜாலம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.


ALSO READ: Navaratri Day 6 : ஸ்ரீ லலிதா திரிபுரா சுந்தரி தேவி அம்மாவின் தரிசனம்


அவரது சில முக்கிய குணாதியங்களையும், திறமைகளின் தொகுப்பையும் இங்கே காணலாம்:


1. நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்த ராவணன், சிவபெருமானின் மிகச் சிறந்த பக்தர். சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற அவர் கடும் தவம் புரிந்தார். ராவணன் தனது கடினமான தவத்தின் வலிமையால் பிரம்மா மற்றும் சிவனிடமிருந்து பல வரங்களைப் பெற்றார். அவரிடம் பல மகத்தான சக்திகளும் இருந்தன.


2. இராவணன் ஒரு விவேகமான அறிஞர். தன் லங்காபுரியின் ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் எடுத்துக்கொண்டு நாட்டு மக்களின் நலனுக்காக பல புத்திசாலித்தனமான திட்டங்களைக் கொண்டுவந்த மாமன்னர் ராவணன்.


3. தமிழ் ராமாயணத்தைப் பொறுத்தவரை, ராவணன் சீதையை சிறை வைத்திருந்தாலும், அவரை தீண்டியது கூட இல்லை. சீதையை கடத்தி வரும் போதும், அவரைத் தொடாமல் அவர் இருந்த நிலத்தையே தூக்கி தன் விமானத்தில் வைத்தார் என்றே இதிகாசங்கள் கூறுகின்றன.


4. இராவணன் ஒரு மிகச் சிறந்த கலைஞர். கவிதை எழுதுவதிலும், பாடுவதிலும், வீணை வாசிப்பிலும் அவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அவரது வீணை வாசிப்புக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது என்று கூறுவர்.


5. ராவணனுக்கு தந்திரம், ஜோதிடம் மற்றும் வேதியியல் பற்றிய அபார அறிவு இருந்தது. இராவணனின் இந்த அறிவுத்திறமைகளைப் பற்றி இராவண சம்ஹிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இன்றும் இதில் எழுதப்பட்டுள்ள பல விஷயங்கள் ஜோதிடர்களுக்கும் மந்திர தந்திரங்களை செய்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.


6. வசியக் கலை தெரிந்தவராக இருந்த ராவணம் ஒரு மாயாஜால வித்தகராகவும் இருந்தார். அவர் விரும்பிய நேரத்தில் விரும்பிய வேடத்திற்கு மாற முடிந்ததற்கு இதுவே காரணம்.


7. இராவணனின் அனைத்து குணங்களையும் பற்றி ராமருக்கும் நன்கு தெரியும். ராவணன் மரண படுக்கையில் இருந்தபோது, ​​அவர்தான் உலகின் மிகச்சிறந்த ஞானி என்றும், அவரிடம் சென்று முக்கியமான மூன்று விஷயங்களைக் கற்று வருமாறும் ராமர் இலக்குவனை அனுப்பி வைத்தார்.


இப்படி எத்தனையோ நல்ல குணங்களும், அரிய திறமைகளும் கொட்டிக்கிடந்தாலும், ராவணன் செய்த ஒரு தவறால், இவை அனைத்தும் மறைக்கப்பட்டன, மறக்கப்பட்டன. இதற்கு ராவணன் தன்னைத் தவிர வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. நன்மைகள் நம்மிடம் பல இருந்தாலும், நாம் செய்யும் தீமை ஒன்றே என்றும் நின்று பேசும் என்பதற்கு ராவணனின் வாழ்க்கையே ஒரு சிறந்த உதாரணம்!!


ALSO READ: அகண்ட ஜோதியில் படிவது கரி அல்ல, குங்குமப்பூ! ஜோத்பூர் தெய்வத்தின் திருவிளையாடல்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR