குளிர்காலத்தில் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கணுமா? இந்த 5 விஷயங்கள் உதவும்!
குளிர்காலத்தில் காலையில் அதிகம் குளிராக இருக்கும் என்பதால், பலரால் படுக்கையில் இருந்து எழுவது கடினமாக இருக்கும். எனவே, அதிகாலையில் எப்படி எழுவது பற்றிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது மிகவும் கடினமான விஷயம் ஆகும். அதிலும் குளிக்காலத்தில் எழுந்திருப்பது அதைவிட கடினமான விஷயம் ஆகும். அதிக குளிராக இருப்பதால் தாமதமாக எழுந்திருக்கும் போது அன்றைய நாளில் பலவற்றை கடினமாக்கும். வேலைக்கு செல்வதில் இருந்து, திருப்ப வீட்டிற்கு வரும் வரை அனைத்திலும் தாமதம் ஏற்படும். இதனால் அதிக மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் குளிர்காலத்தில் சீக்கிரமாக எழுந்திருக்க சில வழிகள் உள்ளன. அவற்றை பின்பற்றினால் காலையில் எழுந்திருப்பது அவ்வளவு கடினமான பணியாக இருக்காது.
மேலும் படிக்க | குழந்தைகளின் சொத்தில் பெற்றோர்கள் உரிமை கொண்டாட முடியுமா?
அடுத்த நாளுக்கான திட்டத்தை உருவாக்கவும்
குளிர்காலத்தில் அடுத்த நாள் என்ன என்ன வேலைகள் உள்ளது என்பதை முதல் நாள் இரவே திட்டமிட்டு கொள்ளுங்கள். இது உங்களை காலையில் சீக்கிரம் எழுந்திருக்க உதவும். மேலும் உங்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். உடற்பயிற்சி, தியானம், புத்தகம் படித்தல் போன்றவை இரவில் நல்ல தூக்கத்தை தரும். இவை உங்களை காலையில் வேகமாக எழுந்திருக்க உதவும்.
இரவு சீக்கிரம் தூங்கச் செல்லுங்கள்
காலையில் சீக்கிரம் எழுந்திருக்க இரவில் சீக்கிரம் தூங்குவது மிகவும் முக்கியம். அதனால் குளிர்காலத்தில் சுறுசுறுப்பாகவும், அடுத்த நாளுக்கு தயாராகவும் எழுந்திருக்க முடியும். நீங்கள் தினசரி வழக்கமான தூக்க நேரத்தை தேர்வு செய்தால், அது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் சீக்கிரம் தூங்கும்போது, அடுத்த நாள் சரியான நேரத்தில் எழுந்திருக்க முடியும்.
அலாரம் செட் செய்து கொள்ளலாம்
அதிகாலையில் எழுந்திருப்பது உங்களுக்கு கடினமாக இருந்தால், படுக்கைக்குச் செல்வதற்கு முன் அலாரத்தை செட் செய்து கொள்ளலாம். குறிப்பாக அலாரத்தை உங்கள் படுக்கையிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அப்போது தான் அதை அணைக்க நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்திரிப்பீர்கள். அலாரத்தை அணைக்க நீங்கள் எழுந்தவுடன், உடனடியாக உங்கள் அறையில் விளக்குகளை ஆன் செய்யவும்.
தூங்கும் முன் உங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள்
தூங்க செல்வதற்கு முன், உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள். அதில் சில நிமிடங்கள் தியானம் செய்யுங்கள், நடைப்பயிற்சி செய்யுங்கள் அல்லது தூங்க உதவும் ஏதேனும் புத்தகத்தைப் படியுங்கள். இரவு தூங்க செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன் மொபைல் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
பொறுமையாக இருங்கள்
நீங்கள் காத்திருந்து உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டால், நல்லதே நடக்கும். உதாரணமாக, நீங்கள் தினமும் அதிகாலையில் எழுந்திருக்க விரும்பினால், சிறிது நேரம் பயிற்சி செய்ய வேண்டும். முதலில், இது கடினமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அதை தொடர்ந்து செய்தால், விரைவில் அது எளிதாக மாறிவிடும். மேலும் நீங்களே சரியான நேரத்தில் எழுந்திருப்பீர்கள்!
மேலும் படிக்க | முதுமையை விரட்டியடிக்கும் 5 பழக்க வழக்கங்கள்... எப்போதும் இளமை ஊஞ்சலாடும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ