குழந்தைகளின் சொத்தில் பெற்றோர்கள் உரிமை கொண்டாட முடியுமா?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொந்தமான சொத்துக்களை உரிமை கோரலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனை பற்றிய புரிதல் பலருக்கும் இருப்பதில்லை. இந்திய அரசியலமைப்பில் இது தொடர்பான பல முக்கிய அம்சங்கள் உள்ளன.

Written by - RK Spark | Last Updated : Dec 22, 2024, 10:40 AM IST
  • குழந்தைகள் சம்பாதிக்கும் சொத்து!
  • பெற்றோருக்கு உரிமை உண்டா?
  • சட்டம் சொல்வது என்ன? தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகளின் சொத்தில் பெற்றோர்கள் உரிமை கொண்டாட முடியுமா? title=

பெற்றோர்கள் மறைந்த பிறகு, பெற்றோரின் சொத்துக்களில் குழந்தைகளுக்கு உரிமை உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொந்தமான சொத்துக்களை உரிமை கோரலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனை பற்றிய புரிதல் பலருக்கும் இருப்பதில்லை. இந்திய அரசியலமைப்பில் இது தொடர்பான பல முக்கிய அம்சங்கள் உள்ளன. குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை பொறுத்து இந்த விதிகள் மாறலாம். இந்தியாவில், சொத்து உரிமை பற்றிய சட்டங்களில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சொத்துக்களில் உரிமை கொண்டாட வெவ்வேறு சூழ்நிலைகள் ஏற்படலாம். இதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மேலும் படிக்க | வருகிறது புதிய விதி! இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!

பெற்றோர்களுக்கு இருக்கும் உரிமைகள்

பெற்றோர்களுக்கு பொதுவாக தங்கள் குழந்தைகள் சொத்தின் மீது எந்த உரிமையும் இல்லை. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் சொத்தில் உரிமை கேட்க முடியும். 2005 ஆம் ஆண்டு முதல் இந்து வாரிசுரிமைச் சட்டம் என்ற சட்டத்தின்படி, குழந்தைகள் தங்களுடைய சொத்து யாருக்கு கிடைக்க வேண்டும் என்பது தொடர்பான உயில் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால் அந்த சொத்துக்களை பெற்றோர்கள் உரிமை கோரலாம்.

தாய்க்கு தான் முதல் உரிமை

இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி, எதிர்பாராதவிதமாக குழந்தை இறந்துவிட்டால், குழந்தையின் சொத்துக்கள் முதலில் தாய்க்கு தான் சென்று சேரும். தாய் உயிருடன் இல்லை என்றால் அல்லது வேறு சில காரணங்கள் இருந்தால் தந்தை குழந்தையின் சொத்துக்களை பெற முடியும். தாய் இருக்கும் பட்சத்தில் தந்தையால் முதல் உரிமை பெற முடியாது. குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கும் பட்சத்தில், அவர் இறந்துவிட்டால் அவர்களின் சொத்துக்களை உரிமை கூறுவதில் சில சட்டதிட்டங்கள் உள்ளன. இந்து வாரிசுரிமைச் சட்டம் இதை பற்றி குறிப்பிடத்தக்க விதிகளை கொண்டுள்ளது.

மகன் சொத்தில் உரிமை

மகன் இறந்துவிட்டால், அவருடைய சொத்துக்கள் யாருக்கு போக வேண்டும் என்பது தொடர்பான உயில் இல்லை என்றால் அவரது தாய் தான் அந்த சொத்துக்களுக்கு சொந்தம் கொண்டாட முடியும். தாய் இல்லாத பட்சத்தில் தந்தை உரிமை கோரலாம். தந்தையுடன் மற்ற வாரிசுகளும் உரிமை கோரலாம்.

மகள் சொத்தில் உரிமை

மகள் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அவருடைய சொத்துக்கள் முதலில் அவருடைய பிள்ளைகளுக்கு தான் போகும். அதன் பிறகு தான் அவருடைய கணவன் உரிமை கோர முடியும். திருமணம் ஆன பெண்ணாக இருந்தால், குழந்தைகளும் கணவரும் தங்கள் பங்குகளை பெற்ற பிறகுதான் பெற்றோர்கள் உரிமை கோர முடியும். மகளுக்கு திருமணம் ஆகவில்லை என்றால், அவருடைய பெற்றோர் முழு சொத்திற்கும் உரிமை கோரலாம். எனவே, மகள் இறந்தால் அவருடைய குழந்தைகளும் கணவரும் முதல் உரிமையாளர்கள், அதன்பிறகு தான் அவருடைய பெற்றோர்கள் வருவார்கள்.

மேலும் படிக்க | 25 வயதில் முதலீடு.. வெறும் 15 வருடங்களில் உங்களை கோடீஸ்வரராக்கும் “12-15-20” ஃபார்முலா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News