குழந்தைகளுக்கான இதய ஆரோக்கியம் கேள்விக்குறியே... ஆய்வில் அதிர்ச்சி தகவல்
10ல் 9 குழந்தைகளுக்கு இதய ஆரோக்கியம் சரியாக இல்லையென்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சமீபமாக அதிகரித்துவருகிறது. குறிப்பாக இள வயதினர் தொடர்ந்து மாரடைப்பால் உயிரிழந்துவருகின்றனர். இதனால் பலரும் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் இளைஞர்கள் தங்களது உடல்நிலையில் முறையான கவனம் செலுத்த வேண்டுமென பலரும் வலியுறுத்த தொடங்கியிருக்கின்றனர். குழந்தைகளின் இதயம் ஆரோக்கியம் சார்ந்த ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கார்டியோ அளவீடுகள் சார்ந்த ஆரோக்கியம் குறைவாக இருப்பதாகவும், 10ல் 9 குழந்தைக்கு இதய ஆரோக்கியம் சார்ந்த வாழ்க்கை முறை இல்லை என்பதும் வெளியாகியுள்ளது.
குர்கானில் உள்ள மெடான்டா மருத்துவமனையின், இன்டர்வென்ஷனல் கார்டியாலஜியின் துணை சேர்மனான மருத்துவர் ரஜ்னீஷ் கபூர் நடத்திய இந்த ஆய்வு வளரும் குழந்தைகளின் ஆரோக்கியம் கவலைக்கிடமாக உள்ளது என்பதையும், அதற்கு பெற்றோர்கள் பொறுப்பேற்று ஆரோக்கியமான தலைமுறையை வளர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
மேலும் படிக்க | இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயலில் உள்ளன - யுஜிசி பட்டியல் வெளியீடு
பஞ்சாப் மற்றும் டெல்லியில் இருந்து, 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, இதய ஆரோக்கியம் சார்ந்த அளவீடுகளில் அவர்கள் மிகவும் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது.
வளரும் பருவத்திலேயே உடல் பருமன், விளையாட்டு போன்ற செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் தொலைக்காட்சி அல்லது மொபைலிலேயே நேரம் செலவிடுவது, உடலுழைப்பு என்று எந்த வேலையிலும் ஈடுபடாமல் இருப்பது ஆகியவை தற்போதைய குழந்தைகளிடம் அதிகமாக காணப்படுகிறது. அதாவது இந்த காரணங்கள்தான் குழந்தைகள் வளரும் பொழுது அவர்களுடைய அடல்ட் பருவத்தில் இதய நோய் பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பரந்தூர் விமான நிலையம்; வேலை வாய்ப்பு, இழப்பீடு வழங்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு
எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து தேவையான நேரத்தில் அவர்களை விளையாட வைத்து, உடலுக்கு உழைப்பு கொடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க | வானிலை எச்சரிக்கை: தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் கனமழை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ