ATM Unlimited Transaction: ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, எந்தவொரு வாடிக்கையாளரும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே ஏடிஎம்மில் இருந்து எந்த வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பணத்தை எடுக்க முடியும். அதன் பிறகு அவர் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக, பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்தில் 5 முறை மட்டுமே இலவச பரிவர்த்தனை வசதியை வழங்குகின்றன. இந்த விதிகள் பொது நகரங்களுக்கானவை, மெட்ரோ நகரங்களில் இந்த வரம்பு 3 முறை என்றுள்ளது.


Ujjivan Small Finance வங்கியில் ஏடிஎம்


உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Ujjivan Small Finance  Bank) ஏடிஎமில் இருந்து பணம் எடுப்பதற்கு,  தனது வாடிக்கையாளர்களிடமிருந்து  கட்டணம் வசூலிப்பதில்லை. அதாவது, இந்த வங்கியில் (Banks), வாடிக்கையாளர் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கலாம்.


உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்பு வசதியை வழங்குகிறது. இதன் கீழ், வாடிக்கையாளர் ஏடிஎம் மற்றும் வங்கியின் கிளை இரண்டிலிருந்தும் வரம்பற்ற இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளை செய்யலாம். இதற்காக, அவர்கள் எந்த தனி கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. ஏடிஎம்-லிருந்து பணப் பரிவர்த்தனை அல்லது பணமில்லா பரிவர்த்தனை எதுவாக இருந்தாலும், வங்கி தனது வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது.


ALSO READ: RBI முக்கிய அறிவிப்பு: ஜனவரி 1 முதல் மாறவுள்ளது கார்ட் கட்டண முறை!!


ஜனவரி 1, 2022 முதல், வாடிக்கையாளர்களிடமிருந்து வாடிக்கையாளர் கட்டணத்தின் வடிவில் சிறிய தொகையை வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்தது. தற்போது, ​​வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்தில் தங்கள் வங்கியின் ஏடிஎம்களில் இருந்து 5 இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மெட்ரோ நகரங்களில், மற்ற வங்கியின் ஏடிஎம்களிலிருந்து 3 பரிவர்த்தனைகள் இலவசமாக உள்ளது. மெட்ரோ அல்லாத நகரங்களில், மற்ற வங்கியின் ஏடிஎம்களிலிருந்து 5 பரிவர்த்தனைகள்  இலவசமாக இருக்கும்.


இந்த இலவச பரிவர்த்தனை வரம்பு நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது. இந்த வரம்புக்குப் பிறகு, வாடிக்கையாளர் ஏடிஎம் மூலம் ஏதேனும் பரிவர்த்தனை செய்தால், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ .21 செலுத்த வேண்டும். இந்த தொகை இதுவரை ரூ .20 ஆக இருந்தது. ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, இந்த கட்டணம் ஜனவரி 1, 2022 முதல் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.


ஏடிஎம் பரிமாற்ற கட்டணத்தை அதிகரிக்க அனுமதி


இது தவிர, ஏடிஎம் (ATM) நிறுவுதல் மற்றும் பராமரிப்புக்கான செலவுகளைக் கருத்தில் கொண்டு சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு பரிமாற்றக் கட்டணத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அனைத்து பணப் பரிவர்த்தனைக்கும் பரிமாற்றக் கட்டணத்தை, ரூ .15 லிருந்து ரூ .17 ஆகவும், பணமில்லா பரிவர்த்தனைக்கு ரூ .5 லிருந்து ரூ .6 ஆகவும் ஆர்பிஐ அதிகரித்துள்ளது.


இந்த புதிய கட்டணங்கள் ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.


நீங்கள் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், அதே வங்கியின் ஏடிஎம்களில் இருந்து பணம் அல்லது பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு எந்த வித வரம்பும் இருக்காது. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற பரிவர்த்தனை வசதியை வழங்கியுள்ளது. அதாவது, நீங்கள் எத்தனை முறை பணம் எடுத்தாலும் அல்லது பணத்தை மற்ற கணக்குக்கு மாற்றினாலும், இதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.


ALSO READ: RBI New Rule: Cheque கொடுக்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள், மீறினால் அபராதம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR