அலுவலகத்திற்கு ‘ஜீன்ஸ், டி-ஷர்ட், மேக்-அப்’ போடத்தடை.... புதிய சட்டம்!
அலுவலகத்திற்கு வரும் ஊழியகள் ‘ஜீன்ஸ், டி-ஷர்ட், மேக்-அப்’ போடத்தடை; மீறினால் நடவடிக்கை...
அலுவலகத்திற்கு வரும் ஊழியகள் ‘ஜீன்ஸ், டி-ஷர்ட், மேக்-அப்’ போடத்தடை; மீறினால் நடவடிக்கை...
இதுவரையில் இந்தியாவில் பல பகுதிகளில் பள்ளிமாணவர்களுக்கு மட்டும் தான் ஆடை கட்டுபாடுகளை விதித்து வந்தனர். இதை தொடர்ந்து சமீபத்தில் கல்லூரி மாணவர்களுக்கு சில ஆடை கட்டுபாடுகளை விதித்தனர். இதை தொடர்ந்து தற்போது, அலுவலகம் செல்லும் பணியாளர்களுக்கும் ஆடை கட்டுபாடுடன் இருக்க வேண்டும் என புதிய சட்டம் உத்தரப்பிரதேசத்தில் வந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஃபதேஹாபாத்தில் உள்ள ஒரு கூட்டுறவு சுகாதார மையத்தின் அதிகாரி ஒருவர், பெண் ஊழியர்கள் வேலைக்குச் செல்லும்போது அலங்காரம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்கள் சுடிதார் அல்லது சாரி மட்டும் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த உத்தரவு பெண் ஊழியர்களுக்கு மட்டும் அல்ல. ஆண் ஊழியர்களும் பணிக்கு வரும் போது டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஃபதேஹாபாத்தில் உள்ள கூட்டுறவு சுகாதார மையத்தின் பொறுப்பாளர் டாக்டர் மனீஷ் குப்தா அனைத்து ஊழியர்களின் முன்னிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த உத்தரவை சுகாதார மையத்தின் அனைத்து ஊழியர்களும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.
ஆண்கள் பணிக்கு வரும் போது சாதாரண பேன்ட், சட்டை மற்றும் கருப்பு காலணிகளை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எந்தவொரு ஊழியரும் ஆடைக் குறியீட்டைப் பின்பற்றத் தவறினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
இது பற்றி தகவல் அறிந்த ஊடகவியலாளர்கள் மையத்தை அடைந்தபோது, சில ஊழியர்கள் மையத்திலிருந்து மாற்றப்பட்டனர். இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் முகேஷ் வாட்ஸ் அதிகம் பேச மறுத்துவிட்டார். எவ்வாறாயினும், ஆடைக் குறியீடு தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவு எதுவும் இல்லை என்று அவர் கூறினார். ஊழியர்களுக்கு ஏப்ரன் மட்டுமே அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.