மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் வாகனங்களின் மூலம் ஏற்படும் மாசுகளை கண்காணிப்பதும் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.  டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு தர சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெட்ரோல் பங்குகளில் (Petrol Bulk) பெட்ரோல் நிரப்பப்படும், இல்லையென்றால் நிரப்பப்படாது என்ற நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இது நடைமுறைப்படுத்துவதற்கு முன் பொது மக்களின் கருத்தாக வைக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | எச்சரிக்கை மணியாக இருக்கும் செயல்பாடுகள்! எளிதில் Corona பாசிட்டிவ் ஆகலாம்


இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கூறுகையில்,  இது எங்கள் அரசு கொண்டுவரும் மிகவும் முக்கியமான கொள்கை. குறிப்பாக குளிர்காலத்தில் டெல்லி கடும் மாசுபாட்டை எதிர்கொள்கிறது, இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வாகனத்திற்கும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் அவசியமாக உள்ளது.  இது வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையின் அளவைக் கண்டறிந்து டெல்லியில் சுத்தமான காற்று இருக்க உதவும். 



வாகன உரிமையாளர்கள் தங்களின் PUC சர்டிபிகேட்டை பெட்ரோல் பங்குக்கு எடுத்து செல்ல வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ் இல்லை என்றால், அங்கேயே தரச்சான்றிதழ் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட மாசு கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் வாகனங்கள் இருந்து வெளியேறும் புகையின் அளவை கண்டறிய முடியும். டெல்லியில் 10 மண்டலங்களில் 966 மாசுக்கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. வாகன மாசுபாட்டை கண்காணிப்பதும், வாகனங்களில் விதிமுறைகளின்படி தகுதிச் சான்றிதழ் அளிப்பதில் அவை மும்முரமாக செயல்படும். 



பெட்ரோல் பங்குகளில் நடத்தப்படும் இந்த நடைமுறையால் டெல்லியில் காற்று மாசுபடுவது முற்றிலும் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்ட உடன் வாகன வாசிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சிரமத்தை எதிர் கொள்ளாமல் தொழில்நுட்ப ரீதியான செயல்பாடுகள் அமல்படுத்தப்படும். தொழில்நுட்பங்கள் இல்லாத பங்குகளில் வேறுவிதமான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.


ALSO READ | Budget 2022: விவசாயிகளுக்கான பல முக்கிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்ப்பு!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR