காலைல எழுந்து பிரேக்ஃபாஸ்ட் செய்ய நிறைய பேருக்கு நேரம் இருக்கறதில்ல. ஆனா அரை மணி நேரத்துக்கும் குறைவா செய்யறதுக்கு நிறைய வெரைட்டியான ஐட்டம்கள் இருக்கு. அதை ஒன்னொன்னா பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புட்டு வகைகள்


இன்னைக்கு தேதியில எல்லாமே Instantதான். வகை வகையான புட்டு மாவு கடைகள்ல கிடைக்குது. வாங்கிட்டு வந்து இட்லி சட்டியில அவிச்சா 15 நிமிடத்துல டிபன் ரெடி ஆயிடும். இதுக்கு சைடு டிஷ் கூட தேவையில்ல. தேங்காய் துருவலும் சர்க்கரையும் வெச்சு சாப்பிட்டுக்கலாம்.


சேமியா வகைகள்


பெரும்பாலும் நமக்கு ஒரு சேமியா வகைதான் தெரியும். ஆனா இப்ப மார்க்கெட்ல கேழ்வரகு, ராகி, கம்பு, திணை, குதிரைவாலினு எல்லா வகை சேமியாவும் வந்துடுச்சி. புட்டு செய்யுற மாதிரியே இட்லி சட்டியில அவிச்சு உடனே சாப்பிட சரியான டிபன் வகை சேமியா. தாளிச்சு சாப்பிட்டா இன்னும் டேஸ்ட் தூக்கலா இருக்கும்.


மேலும் படிக்க | இளம் வயதிலேயே நரைமுடி பிரச்னையா, உடனே இத பண்ணுங்க


பிரட், ஜாம், பட்டர்


இது என்ன டா நம்ம ஊருக்கு செட் ஆகாத ஐட்டமா இருக்குனு யோசிக்காதீங்க. நேரம் இல்லாத நேரத்துல கைகுடுக்கற அம்சமான ஐட்டம். பக்கத்து கடையில ஒரு பிரட் பாக்கெட்டும் பட்டர் ஜாமும் வாங்கிட்டா 15 நிமிடம் கூட தேவையில்ல. 5 நிமிடத்துல டிபன் தயார் ஆயிடும். கூட Peanut பட்டர் சேர்த்து சாப்பிட்டு பாருங்க. சத்தான டிப்பனாவும் ஆச்சு.



முட்டை, பால்


எதுவுமே கிடைக்காத நேரத்துல டக்குனு கைகுடுக்கற விஷயம் முட்டைதாங்க. 2 இல்லனா 3 முட்டையை சாப்பிட்டுட்டோம்னா சாயங்காலம் வரைக்கும் பசி எடுக்காது. ரொம்ப விக்குச்சினா கூட ஒரு கிளாஸ் பால் சேர்த்துக்கோங்க. அருமையா உள்ளே இறங்கிடும். முட்டையை அவிச்சு சாப்பிடுறது நல்லது. நேரம் இல்லைனா அடை ஊத்திக்கோங்க.



நூடுல்ஸ், பாஸ்தா


நூடுல்ஸ் இல்லனா பாஸ்தா. ரெண்டும் ஒரே ஐட்டம்தான். வேற வேற டிசைன்ல இருக்கும். நிறைய பேருக்கு Maggi மாதிரியான Instant Noodles பிடிக்காது. அவங்க நூடுல்ஸ் இல்லனா பாஸ்தாவை வாங்கி வெச்சுக்கிட்டா தேவைப்படுற நேரத்துல வேக வெச்சு சாப்பிடலாம். அதுக்கு அப்பறம் கூட வெங்காயம் தக்காளி தாளிச்சு மசாலா போட்டு கிண்டுனா 15 நிமிட நூடுல்ஸ் ரெடி.


மேலும் படிக்க | Belly Fat: இந்த 5 விஷயங்களை செஞ்சா போதும், தொப்பை தொலைந்துவிடும்


பழங்கள்


பழங்கள் மாதிரியான சத்தான உணவு கிடையாது. ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம் எல்லாத்தையும் சேர்த்து அறுத்துப் போட்டு அப்படியே பச்சையா சாப்பிடலாம். சமைக்குறதுக்கான நேரமே தேவையில்லை. ஆரோக்கியமான உணவும் கூட. பத்தலனா கூட ஒரு கிளாஸ் பால் குடிச்சுக்கோங்க.



புல்லட் புரூப்ஃ டீ


ஒரு கப் பால் எடுத்துக்கிட்டு அதுல ஒரு 30 கிராம் வெண்ணையை சேர்த்துப் போட்டு கொதிக்க வெச்சா புல்லட் புரூஃப் பால் ரெடி. இந்த ஒரு கப் பாலை குடிச்சாலே மதியானம் வரைக்கு பசியே எடுக்காது. அப்படி ஒரு விஷயம் இதுல இருக்கு. கூட டீ டிகாஷன் கலந்துக்கிட்டா புல்லட் ஃபுரூஃப் டீ ரெடி. சர்க்கரை சேர்க்குறதும் சேர்க்காததும் உங்க விருப்பம்.


மேலும் படிக்க | மஞ்சள் தண்ணீரின் மகத்தான நன்மைகள்: இன்றே பருக துவங்குங்கள்


பருப்பு வகைகள்


காலைல சாப்பிட எதுவுமே இல்லனா இதை டிரை பண்ணுங்க. பாதாம், முந்திரி, பிஸ்தா கூடவே காய்ஞ்ச திராட்ச்சை. கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடாம கொஞ்டம் எக்ஸ்டிராவா சேர்த்து சாப்பிட்டா நல்லாவே பசி தாங்கும். பாதாம்ல அதுக்கான சத்துகள் இருக்கு. 


இதெல்லாம் உடனடியா செய்யக்கூடிய டிபன் வகைகள் மட்டும்தான். ஆனா சமையல்ங்குறது ரசிச்சு நேரம் எடுத்து செய்யக்கூடிய விஷயம். நேரம் இருக்கறப்ப நல்ல டிபனா செஞ்சு சாப்பிடுங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR