இனிமே ஈஸியா ஃப்ளிப்கார்ட்டில் நீங்க பயன்படுத்திய மொபைலை விற்கலாம்!
ஃப்ளிப்கார்ட் தளத்தில் பயன்படுத்திய மொபைலை விற்பதன் மூலம் ஃப்ளிப்கார்ட் வழங்கும் எலக்ட்ரானிக் கிஃப்ட் வவுச்சரைப் பெற முடியும்.
அன்றாடம் சந்தையில் பலவிதமான மொபைல்கள் வந்துகொண்டே இருக்க, பலரும் புதுவிதமான மாடல்களை நோக்கி நகர்கின்றனர். அதில் பலர் தாங்கள் பயன்படுத்திய பழைய மொபைலை விற்பனை செய்கின்றனர். அவ்வாறு பழைய மொபைல்களை சிறந்த முறையில் விற்க இந்திய இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட் சிறந்த திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது, அதுதான் 'மீண்டும் விற்பனை' திட்டம்.
மேலும் படிக்க | போனில் அதிவேக இணைய சேவை கிடைக்காததற்கு ‘இந்த’ தவறு காரணமாக இருக்கலாம்!
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய மொபைலை எளிதாகவும் மற்றும் நம்பகத்தன்மையுடனும் விற்க முடியும். அதுமட்டுமல்லாது இந்த தளத்தில் மொபைலை விற்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஃப்ளிப்கார்ட் எலக்ட்ரானிக் கிஃப்ட் வவுச்சரை தருவதாகவும் அறிவித்துள்ளது, மேலும் இந்த திட்டத்தில் அனைத்து விதமான மொபைல்களை விற்க முடியும்.
பிளிப்கார்ட் வழங்கும் மீண்டும் விற்பனை திட்டத்தை செயல்படுத்த பிளிப்கார்ட் தளத்திற்கு சென்று அதில் கீழே உள்ள மீண்டும் விற்பனை பகுதியை தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் அவர்கள் பயன்படுத்திய தொலைபேசியின் நியாயமான மதிப்பை மதிப்பிடுவதற்கு முன்னர் அதில் மூன்று விதமான கேள்விகள் கேட்கப்படுகிறது, அவற்றிற்கு வாடிக்கையாளர் பதிலளித்த பின்னர் இந்த செயல்முறையை அவர்கள் உறுதி செய்யவேண்டும். அதில் கேட்கப்படும் தகவல்களை அளித்துவிட்டு விறபனையை உறுதி செய்ததும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளரின் வீட்டிலிருந்து தொலைபேசி எடுக்கப்படும், அதோடு விற்கப்படும் மொபைலின் நிலை மற்றும் வாடிக்கையாளர் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டவுடன், அடுத்த சில மணி நேரங்களில் அவர்களுக்கு ஃபிளிப்கார்ட் வவுச்சரை வழங்கும். ஃப்ளிப்கார்ட் வழங்கும் இந்த கிஃப்ட் வவுச்சரை ப்ளிப்கார்ட்டில் மட்டுமே ரிடீம் செய்ய முடியும்.
எலக்ட்ரானிக் ரீகாமர்ஸில் சிறந்து விளங்கும் யாந்த்ரா நிறுவனத்தை ஃபிளிப்கார்ட் குழுமம் வாங்கிய பிறகு தான் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. யாந்த்ராவின் முதன்மையான நோக்கம் அதன் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை வழங்குவதேயாகும். ஐடிசி வெளியிட்டுள்ள அறிக்கைபடி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 125 மில்லியன் பயன்படுத்திய மொபைல்களில் வெறும் 20 மில்லியன் மொபைல்கள் மட்டுமே சந்தைக்குத் திரும்புகிறது, இதனால் நாட்டில் மின்கழிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த திட்டத்தின் மூலம் மின்கழிவுகளின் எண்ணிக்கை குறைய தொடங்கும் அதனால் பாதிப்பு ஏற்படாது. மேலும் இந்த திட்டம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஃபிளிப்கார்ட் தளம் நோக்கி இழுக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்கலாம் | Flipkart Sale: ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இந்த லேப்டாப் வெறும் ரூ.15 ஆயிரத்துக்கு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR