LPG Gas Cylinder: கேஸ் சிலிண்டர்கள் வாங்க விரும்பினால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மிஸ்டுகால் மூலம் எல்பிஜி இணைப்பை வீடு தேடி வர வைக்கலாம். அரசு நிறுவனத்தால் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு பல வகையான விருப்பங்கள் வழங்கப்படுகின்றன.  ஆனால் இப்போது நீங்கள் மிஸ்டு கால் மூலம் மட்டுமே எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும். அதேபோல், எல்பிஜி இணைப்பை வீட்டில் இருந்தபடியேவும் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இண்டேன் புதிய அறிவிப்பு


இண்டேன் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பொது பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு மிஸ்டு கால் எண்ணை வழங்கியுள்ளது. சிலிண்டர்களை வீட்டு வாசலில் டெலிவரி செய்து தருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன்னர் ஊழியர்களுக்கு அரசு கொடுத்த நல்ல செய்தி 


IOCL ட்வீட் சொல்வது என்ன?


ஐஓசிஎல் தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டில், இப்போது உங்கள் புதிய இண்டேன் எல்பிஜி இணைப்பை மிஸ்டுகால் மூலம் மட்டுமே பெற முடியும் என்று தெரிவித்துள்ளது. 8454955555 என்ற எண்ணுக்கு டயல் செய்தால் எல்பிஜி இணைப்பு உங்கள் வீட்டு வாசலை வந்தடையும்.


எப்படி விண்ணப்பிக்கலாம்?


* 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்த பிறகு, இண்டேனில் இருந்து உங்களுக்கு ஒரு செய்தி வரும்.
* அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
* அதன் பிறகு உங்கள் விவரங்கள் கேட்கப்படும்.
* இந்த விவரத்தை பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் அதை சமர்ப்பிக்க வேண்டும்.
* இதற்குப் பிறகு, விநியோகஸ்தர் உங்களுடன் இணைவார்.
* உங்கள் முழு செயல்முறைக்குப் பிறகு எல்பிஜி வழங்கப்படும்.


சிலிண்டர்களை நிரப்பலாம்


இது தவிர, ஏற்கனவே நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். அறிவிக்கப்பட்டுள்ள இந்த எண்ணில் இருந்து மிஸ்டு கால் செய்வதன் மூலம் சிலிண்டரை நிரப்பிக் கொள்ளலாம். இதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து அழைக்க வேண்டும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் நவராத்திரி பரிசு, டிஎ ஹைக் அப்டேட் இதோ!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ