தற்போது, நாட்டில், வாகனம் இல்லாத வீடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் சில வீட்டுகளில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தனித் தனி வாகனம் உள்ளது. இதனால், ஆர்.டி.ஓ அலுவலகத்தில், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான  விண்ணப்பங்கள் தொடர்ந்து அதிக அளவில் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் மக்களுக்கு தரமான வகையில் ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக, ஓட்டுநர் பயிற்சி மையங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில், ஓட்டுனர் பயிற்சியை எடுத்துக் கொண்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். அதற்கான ஆர்.டி.ஓ (RTO) அலுவலகங்களில் தனியாக ஓட்டுநருக்கான சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய நடைமுறை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிப்பில் கூறப்பட்டது. புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது.


"அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து ஓட்டுநர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த எந்தவொரு நபரும், ஓட்டுநர் உரிமத்திற்கு (Driving License) விண்ணப்பிக்கும் போது ஓட்டுநர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்" என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | பிரதமர் மோடி இல்லத்தில் முக்கிய ஆலோசனை; மத்திய அமைச்சரவையில் மாற்றமா?


முன்னதாக, கடந்த மார்ச் மாதம்,  மத்திய அரசு, உரிமம் புதுப்பித்தல், நகல் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் மற்றும் பதிவு சான்றிதழ்,  உள்ளிட்ட 18 சேவைகளை பெற விண்ணப்பதாரர்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டது. 


ALSO READ | உ.பி. அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் 90 நிமிடம் அமித் சாவை சந்தித்து பேசிய யோகி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR