Ola Electric Scooter Launch Date and Time: மின்சார வாகன சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா மின்சார ஸ்கூட்டரின் அறிமுகத்துக்காக அனைவரும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓலா தனது மின்சார ஸ்கூட்டரை இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது ஓலா நிறுவனம் ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கான துல்லியமான நேரத்தைப் பற்றியும் கூறியுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் சமீபத்தில் ஒரு ட்வீட்டை வெளியிட்டது. ஆகஸ்ட் 15 அன்று மதியம் 2 மணிக்கு ஒரு மெய்நிகர் நிகழ்வை நடத்தி அதில் ஓலா மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளதாக ஓலா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.



இந்த மின்சார ஸ்கூட்டர், நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். ஏதர் 450 எக்ஸ், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக ஓலா மின்சார ஸ்கூட்டர் மின்சார வாகன சந்தையில் இறங்குகிறது. சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஆகஸ்ட் 15 அன்றுதான் அறிமுகம் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, ஓலா எலக்ட்ரிக், ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை வெறும் ரூ .499 விலையில் துவக்கி பெரும் வரவேற்பைப் பெற்றது. ஸ்கூட்டர் வெறும் 24 மணிநேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 1 லட்சம் முன்பதிவுகளைப் பெற்றது. ஸ்கூட்டரின் விலை 1 லட்சத்திற்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டரை ஹோம் டெலிவரி செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


ALSO READ: Ola Electric Scooter: ஆகஸ்ட் 15 அன்று அட்டகாச அறிமுகம், முக்கிய விவரங்கள் இதோ!!


ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Ola Electric Scooter) குறைந்தபட்ச வடிவமைப்பு தத்துவத்தில் வடைவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் 10 வெவ்வேறு வண்ணங்களில் தங்களுக்கு பிடித்தமான வண்ணத்தை தேர்வு செய்யலாம். இந்த ஸ்கூட்டர் இரட்டை எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் அப்-பிரண்ட், நேர்த்தியான டர்ன் இன்டிகேட்டர்கள், ஸ்பிளிட் கிராப்  ரெயில்கள் மற்றும் அலாய் வீல்களைக் கொண்டிருக்கும்.


சமீபத்தில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவேஷ் அகர்வால் சமூக வலைதளங்களில் 17 வினாடி வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அதில் ஸ்கூட்டர் ரிவர்சில் செல்வது காட்டப்பட்டது. இருப்பினும், இந்த ஸ்கூட்டரில் ரிவர்ஸ் கியர் இல்லை.


ஓலா மின்சார ஸ்கூட்டரை (Electric Scooter) 10 வண்ணங்களில் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் கருப்பு, வெள்ளை, சாம்பல், மஞ்சள், சிவப்பு, நீலம் மற்றும் அவற்றின் சாயல் வண்ணங்கள் இருக்கும்.


பூட் ஸ்பேசைப் பொறுத்தவரை, இது கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. வீடியோ டீசரில் பூட் ஸ்பேசில் இரண்டு ஹெல்மெட்டுகளை வைக்க முடியும் என்பது தெளிவானது. வழக்கமாக ஸ்கூட்டரின் பூட் ஸ்பேசில் ஒரே ஒரு ஹெல்மெட்டை மட்டுமே வைக்க முடியும்.


ஸ்கூட்டரின் விவரக்குறிப்புகள் குறித்து விரிவான தகவல்கள் இன்னும் கொடுக்கப்படவில்லை. எனினும், ஒரே சார்ஜில் இந்த ஸ்கூட்டர் 90 கிமீ டாப் ஸ்பீடையும் 150 கிமீ தூரத்தையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கபப்டுகின்றது. மின்சார வாகனமாக இருப்பதால், இதன் முடுக்கும் திறன் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 


இந்த ஸ்கூட்டருடன் ஒரு ஹோம் சார்ஜரும் கொடுக்கபடும். எனினும், வேகமாக சார்ஜ் செய்வதையும், அதாவது, ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் இது சப்போர்ட் செய்யும். 


நிறுவனம் ஒரு வலுவான சார்ஜிங் நெட்வொர்க்கை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. முதல் ஆண்டில் 100 நகரங்களில் 5,000 க்கும் மேற்பட்ட சார்ஜிங் பாயிண்டுகளை அமைப்பதை ஓலா நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த கட்டமாக, 400 நகரங்களில் 100,000 க்கும் மேற்பட்ட சார்ஜிங் மையங்களை (Hyper Charging Points) நிறுவனம் உருவாக்கும்.


ALSO READ: Ola Electric ஸ்கூட்டருக்கு போட்டியாக ஆகஸ்ட் 15 அறிமுகமாகிறது Simple one ஸ்கூட்டர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR