OLA Electric Scooter: இந்திய சாலைகளில் கலக்க வருகிறது, விரைவில் அறிமுகம், விவரம் இதோ

ஓலா கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதல் மின்சார ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்க ரூ .2,400 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. இந்த தொழிற்சாலை உருவானவுடன் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 22, 2021, 07:32 PM IST
  • இது எலக்ட்ரிக் வாகனங்கள், அதாவது மின்சார வாகனங்களின் யுகமாகும்.
  • ஓலா எலக்ட்ரிக், ஜூலை மாதத்திற்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
  • 400 நகரங்களில் ஒரு லட்சம் சார்ஜிங் பாயிண்டுகளும் நிறுவப்படும்.
OLA Electric Scooter: இந்திய சாலைகளில் கலக்க வருகிறது, விரைவில் அறிமுகம், விவரம் இதோ  title=

புதுடெல்லி: இது எலக்ட்ரிக் வாகனங்கள், அதாவது மின்சார வாகனங்களின் யுகமாகும். இன்னும் சில நாட்களில் இந்த துறையில் அதிக முன்னேற்றங்கள் ஏற்படவுள்ளன. பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. 

ஓலா எலக்ட்ரிக் (OLA Electric) இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் ஓலா நிறுவனம் 'ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்கில்' செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் நாட்டின் 400 நகரங்களில் ஒரு லட்சம் சார்ஜிங் தளங்கள் (Charging Points) நிறுவப்படும்.

1 ஆண்டில் 20 லட்சம் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படும் 

ஓலா கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதல் மின்சார ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்க ரூ .2,400 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. இந்த தொழிற்சாலை உருவானவுடன் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். இது உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி தொழிற்சாலையாக இருக்கும். இந்த தொழிற்சாலையின் ஆண்டு உற்பத்தி திறன் 2 மில்லியன் யூனிட்டுகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: Bajaj Chetak vs TVSiQube: உங்கள் பணத்துக்கு நல்ல மதிப்பை அளிக்கும் Electric scooter எது?

ஸ்கூட்டர் விற்பனை ஜூலை மாதம் தொடங்கும்

ஓலா நிறுவன தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் கூறுகையில், 'ஜூன் மாதத்திற்குள் இந்த தொழிற்சாலையை (Ola Factory) அமைத்து முடிப்போம். துவக்கத்தில், முதல் ஆண்டில், 20 லட்சம் ஸ்கூட்டர்கள் மட்டுமே தயாரிக்கப்படும். எனினும், அடுத்த 12 மாதங்களில் உற்பத்தியை அதிகரிப்போம். தொழிற்சாலை தொடங்கி 1 மாதத்திற்குப் பிறகு, அதாவது ஜூலை மாதத்தில் ஸ்கூட்டர் விற்பனை தொடங்கும்" என்றார். 

1 லட்சம் சார்ஜிங் பாயிண்டுகளை அமைக்கும் ஓலா நிறுவனம் 

ஓலாவின் ஹைப்பர் சார்ஜர் நெட்வொர்க் (Hyper Charger Network) உலகின் மிக விரிவான இரு சக்கர வாகன சார்ஜிங் இணைப்பாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் கீழ் 400 நகரங்களில் ஒரு லட்சம் சார்ஜிங் பாயிண்டுகள் நிறுவப்படும். முதல் ஆண்டில், நாட்டின் 100 நகரங்களில் 5,000 சார்ஜிங் பாயிண்டுகள் நிறுவப்படும் என ஓலா (OLA) நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சார்ஜிங் பாயிண்டுகளில் வெறும் 18 நிமிடங்களில் ஸ்கூட்டரை 50 சதவீதம் சார்ஜ் செய்து விடலாம். இது தற்போது நாட்டில் உள்ள சார்ஜிங் கட்டமைப்பை ஒப்பிடுகையில் இரண்டு மடங்கை விட அதிகமாகும்.

ALSO READ: World's largest e-scooter plant: தமிழகத்தில் ஓலாவின் பிரம்மாண்டமான தொழிற்சாலை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News