ஆன்லைன் கடன் மோசடி: நீங்கள் அவசரகாலத்தில் ஆன்லைன் கடன் பெறுவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும். டிஜிட்டல் லோன் எடுக்க இன்று பல தளங்களும் செயலிகளும் சந்தையில் வந்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு நபருக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் கடன் வாங்க வேண்டய நிலை ஏற்படுகிறது. எனினும், பல சமயங்களில் நாம் வாங்கும் கடன் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ளாமல், அவசர அவசரமாக கடன் வாங்குகி பின் அவதிப்படுகிறோம். 


கடன்களுக்கான சரியான செயலி அல்லது தளத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக பார்க்கப்படுகின்றது. இது குறித்த சில தகவல்களை பிஐபி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம்.


அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்களில் ஜாக்கிரதை


ஆன்லைனில் கடன் வாங்கும் போது எப்போதும், பதிவு செய்யப்பட்ட செயலி அல்லது தளங்களை மட்டுமே பயன்படுத்தவும். போலியான அல்லது அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் வழங்கும் தளம் அல்லது மொபைல் செயலியை நாட வேண்டாம். பதிவு செய்யப்பட்ட செயலி அல்லது தளங்களை பயன்படுத்தினால், எந்த ஒரு மோசடிக்கும் நீங்கள் பலியாக மாட்டீர்கள்.


ஏமாந்து விடாதீர்கள் 


போலி டிஜிட்டல் லெண்டிங் ஆப்ஸ் உங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் எளிதாக கடன் தருவதாக அடிக்கடி கூறுகின்றன. இதுபோன்ற எந்த ஒரு மாயையிலும் மக்கள் விழ வேண்டாம் என்று PIB கேட்டுக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | Loan Fraud: உங்கள் பான் கார்டில் வேறு யாராவது கடன் வாங்கியிருக்கிறார்களா? தெரிந்து கொள்ளுங்கள்


தெரியாத நபர்களுடன் KYC விவரங்களைப் பகிர வேண்டாம்


மக்கள் தங்கள் KYC ஆவணங்கள் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை அறியப்படாத நபர், அங்கீகரிக்கப்படாத நபர் அல்லது செயலியில் பகிர வேண்டாம் என்று PIB கேட்டுக் கொண்டுள்ளது.


இங்கே புகார் அளிக்கவும்


நீங்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் செயலி அல்லது தளத்தை எதிர்கொண்டால், Sachet போர்ட்டலில் (sachet.rbi.org.in) புகார் செய்யலாம்.


ஆர்பிஐ வழிகாட்டுதல்கள்


வங்கிகள் மற்றும் என்பிஎஃப்சி-கள் பயன்படுத்தும் டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்கள் வங்கி அல்லது என்பிஎஃப்சி-யின் பெயரை வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயப்படுத்தியுள்ளது.


ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் கடன் வழங்குகின்றன. இது சாத்தியமா என நமக்கு தோன்றலாம். சில நிறுவனங்கள் ஒருவரின் பான் எண்ணை பயன்படுத்தி, மற்றவர்களுக்கு கடன் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சமீபத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், உங்கள் பான் எண்ணில் வேறு யாரேனும் கடன் வாங்கியிருக்கிறார்களா என்பதை அவ்வப்போது சரிபார்ப்பது அவசியமாகும். 


மேலும் படிக்க | இந்த தவறுகளை செய்தால் உங்கள் PF கணக்கு செயல்படாது: இவற்றில் கவனம் தேவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR