Loan Fraud: உங்கள் பான் கார்டில் வேறு யாராவது கடன் வாங்கியிருக்கிறார்களா? தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் பான் எண்ணில் வேறு யாரேனும் கடன் ஏமாற்றியிருக்கிறார்களா? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 11, 2023, 06:17 PM IST
  • ஆன்லைன் செயலிகள் மூலம் மோசடி
  • திருடப்படும் தனிநபர் தகவல்கள்
  • பான் கார்டு மோசடியால் மக்கள் அதிர்ச்சி
Loan Fraud: உங்கள் பான் கார்டில் வேறு யாராவது கடன் வாங்கியிருக்கிறார்களா? தெரிந்து கொள்ளுங்கள் title=

ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் கடன் வழங்குகின்றன. இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், சில நிறுவனங்கள் வேறொருவரின் பான் எண்ணை பயன்படுத்தி, மற்றவர்களுக்கு கடன் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், உங்கள் பான் எண்ணில் வேறு யாரேனும் கடன் வாங்கியிருக்கிறார்களா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

இந்தியா புல்ஸ் மீது புகார்

தனியார் கடன் வழங்கும் நிறுவனமான இந்தியா புல்ஸ் மீது அண்மையில் பல குற்றச்சாட்டுகள் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் எழுந்தது. அந்த நிறுவனம் வேறொருவரின் பான் எண்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கியுள்ளது. கடன் வாங்கியவர்களின் முகவரி பீகார், உத்தரப்பிரதேசம் என இருந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், பான் எண்ணுக்கு சொந்தகாரருக்கு தெரியாமலேயே இந்த மோசடி அரங்கேறியுள்ளது. 

மேலும் படிக்க | Pan - Aadhar Link: மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்

சன்னி லியோன் பெயரிலும் மோசடி

பாலிவுட் நடிகை சன்னி லியோன் பான் கார்டு பயன்படுத்தியும் இதுபோன்ற மோசடிகள் நடந்துள்ளது. இதனை அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இவ்வாறான மோசடிகள் அரங்கேறும்போது பான் எண் பயன்படுத்தப்பட்ட நபர்களின் கிரெடிட் ஸ்கோர் குறைந்திருக்கும். தனிநபர் குறித்த தகவல்களை மோசடியாக பெற்று இதுபோன்ற மோசடிகள் அரங்கேற்றப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

தப்பிப்பது எப்படி? 

இதுபோன்ற மோசடிகளில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், முதலில் உங்களின் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்க வேண்டும். TransUnion CIBIL, Equifax, Experian அல்லது CRIF High Mark போன்றவை வழியாகவும் நீங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபாக்க முடியும். எஸ்பிஐ கார்டு, பேடிஎம், பேங்க் பஜார் போன்ற ஆப்களில் கிரெடிட் ஸ்கோர் சரிபார்க்கும் வசதி உள்ளது. உங்களின் கிரெடிட் ஸ்கோர் சரிபார்ப்பதன் மூலம் எப்போது எங்கு கடன் வாங்க்கப்பட்டிருக்கிறது போன்ற தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும். அதில் நீங்கள் கடன்வாங்காத தரவுகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக வருமானவரித்துறையிடம் புகார் அளிக்க வேண்டும்.

மேலும் படிக்க | PAN Aadhar Link: இவர்களெல்லாம் பான் கார்டு ஆதாருடன் இணைக்க தேவையில்லை...!

மேலும் படிக்க | ஆதார்-பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?

மேலும் படிக்க | ஆதார் - பான் இணைப்பு: லட்சக்கணக்கானோருக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News