இந்திய டிஜிட்டல் சேவை துறையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கமும், வாடிக்கையாளர்களை கொண்டு உள்ள துறை என்றால் ஆன்லைன் புட் டெலிவரி மற்றும் குவிக் காமர்ஸ் துறை தான். இத்துறையில் சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய இரு நிறுவனங்களும்  பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிஜிட்டல் வர்த்தகம் தான் எதிர்காலம் என மாறிவிட்ட நிலையில் மத்திய அரசு அனைத்து தரப்பு வர்த்தகர்களையும், மக்களையும் டிஜிட்டல் வர்த்தக சந்தைக்குள் கொண்டு வந்து இணைக்கும் முயற்சியில் Open Network for Digital Commerce (ONDC) என்ற தளத்தை உருவாக்கியது. இத்தளத்தில் யார் வேண்டுமானலும் எங்கு வேண்டுமானாலும் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய முடியும். 


இந்நிலையில், Swiggy மற்றும் Zomato போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி தளங்களை விட ONDC மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவு மிகவும் மலிவான விலையில் கிடைப்பதாக கூறப்படுகிறது. Swiggy மற்றும் Zomato ஐ விட ONDC எப்படி மலிவான உணவை வழங்குகிறது என்பதை ஒப்பிட்டுப் பல இணைய பயனர்கள் ட்விட்டர் தளத்தில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.


 



 



 


மேலும் படிக்க | ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிளெய்ம் நிராகரிக்கப்படாமல் இருக்க...!

ONDC நேரடி இணைப்பு மற்றும் ஆர்டர் செய்யும் முறை


வழிமுறை 1: ONDC இணையதளத்தைப் பார்வையிடவும் - https://ondc.org/.


வழிமுறை 2: இப்போது, ‘Shop on ONDC’ டேப்பில் கிளிக் செய்யவும்.


வழிமுறை 3: நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பும் ஆன்லைன் தளத்தை (Paytm, Mystore, Craftsvilla, To Life Bani, Meesho, Pincode, maginpin) தேர்ந்தெடுக்கவும்


வழிமுறை 4: 'Shop Now' என்பதைக் கிளிக் செய்யவும்.


வழிமுறை 5: உங்கள் ஆர்டரைத் தேர்ந்தெடுக்கவும்.


வழிமுறை 6: பணம் செலுத்த தொடரவும். பணம் செலுத்திய பின்னர் நீங்கள் ஆர்டர் செய்தது வீடு தேடி வரும்.


டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் (ONDC) என்றால் என்ன?


டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க் (ONDC) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுக-வகை நெறிமுறை ஆகும். இது சிறிய சில்லறை விற்பனையாளர்கள் பெரிய தொழில்நுட்ப அடிப்படையிலான இ-காமர்ஸ் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க உதவும் வகையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.


ONDC என்பது சிறு சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும், இ-காமர்ஸ் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் ஆன மத்திய அரசின் ஒரு முயற்சியாகும். வாங்குபவர்களும் விற்பவர்களும் ஒரே மேடையில் இருக்க வேண்டிய அவசியமின்றி பரிவர்த்தனை செய்யக்கூடிய வெளிப்படையான வகையில், இயங்கக்கூடிய நெட்வொர்க்கை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறிய சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் சேவைகளையும் பொருட்களையும் நாடு முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு ஆன்லைன் வணிகம் மூலம் வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அங்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய எந்த பொருட்களையும் வாங்க முடியும்.


மேலும் படிக்க | குறைந்த வட்டியில் கிடைக்கும் PPF மீதான கடன்! விண்ணப்பிக்கும் முறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ