Zomato உருவான கதை... சில ஆச்சர்யத் தகவல்கள்!

Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் டெல்லியில் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்த சமயத்தில், ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மதிய உணவை வழங்க அலுவகத்தில் உள்ள உணவகம் சந்தித்த சிக்கல்களை பார்த்து அதற்கு தீர்வு ஏற்படுத்த முயன்றார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 24, 2023, 03:21 PM IST
  • இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கின்றனர்.
  • Zomato பெரிய நிறுவனமாக உருவாக காரணம்.
  • இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு விநியோக செயலி சொமேட்டோ.
 Zomato உருவான கதை... சில ஆச்சர்யத் தகவல்கள்! title=

இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு விநியோக செயலியான சொமேட்டோவை (Zomato) பயன்படுத்தாவர்கள் இருக்க முடியாது. இது ஸ்டார்ட் அப்களின் காலம். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கின்றனர். உங்கள் சொந்த உணவு விநியோக வணிக மாதிரியைத் தொடங்க நீங்கள் நினைத்தால், மிகவும் பிரபலமான உணவு விநியோக செயலியான Zomato பற்றிய ஆச்சர்யமான முக்கியமான தகவல்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உணவகங்கள் நூறாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் தங்கள் சுவையான உணவை வழங்க Zomato சிறந்த வகையில் உதவி செய்கிறது. Zomato ஆன்லைன் வணிகங்களுக்கு நெகிழ்வுத்தன்மையையும் வசதியையும் வழங்குகிறது.

Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் பஞ்சாப்பில் பிறந்து வளர்ந்தவர். டெல்லி ஐஐடியில் கணினி பிரிவில் பட்டம் பெற்றவர். டெல்லியில் ஓர் அலுவலகத்தில் தீபிந்தர் பணிபுரிந்த சமயத்தில், ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மதிய உணவை வழங்க அலுவகத்தில் உள்ள உணவகம் சந்தித்த சிக்கல்களை பார்த்து அதற்கு தீர்வு ஏற்படுத்த முயன்றார். அதன் விளைவாக உருவானது தான் இன்றைய சொமேட்டோ நிறுவனம். 

Zomato எவ்வளவு பெரிய நிறுவனமாக உருவாக காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

1. பங்கஜ் சாதா மற்றும் தீபிந்தர் கோயல் ஆகியோரால் நிறுவப்பட்ட Zomato ஒரு இந்திய உணவு விநியோக ஸ்டார்ட்அப் நிறுவனமாகும்.

2. ஆரம்பத்தில் இது "Fufibe" என்று பெயரிடப்பட்டது, பின்னர் 18 ஜனவரி 2010 அன்று "Zomato" என மறுபெயரிடப்பட்டது.

3. உலகளவில் 10,000 க்கும் மேற்பட்ட நகரங்களுடன் 24 நாடுகளில் உணவு விநியோக செயலி செயல்படுகிறது.

4. தற்போது Zomato 13 வருட பயணத்தை நிறைவு செய்துள்ளது.

மேலும் படிக்க | இனி 225 நகரங்களில் உணவு டெலிவரி சேவை இல்லை! Zomato நிறுவனம் அறிவிப்பு!

5. Zomato நிறுவனத்தில் Infoedge 18.4% பங்குகளை வைத்துள்ளது. Zomato நிறுவன வருவாய் 2019ம் ஆண்டில் 1300 கோடியாக இருந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு 2800 கோடியாக அதிகரித்துள்ளது.

6. ஜொமேட்டோவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு "பிரியாணி". 2020 ஆம் ஆண்டில் 44 லட்சத்திற்கும் அதிகமான பிரியாணி ஆர்டர்கள் கிடைத்தன.

7. 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய்களின் போது, ​​Zomato நிமிடத்திற்கு 22 பிரியாணிகளை வழங்கியது.

8. Zomato தினமும் சராசரியாக 12.5 லட்சம் ஆர்டர்களைப் பெறுகிறது.

9. Zomatoவில் இது வரை வந்த ஆர்டர்களில், அதிக அளவிலாம்ன மதிப்பு கொண்ட ஆர்டர் சுமார் ரூ.2 லட்சம் ரூபாய்க்கானது.

10. Zomato ஐபிஓ இந்தியாவில் ஸ்டார்ட்அப்பின் மிகப்பெரிய IPO ஆகும்.

11. Zomato உணவக உணவு மட்டுமல்ல, மளிகை சாமான்கள் மற்றும் பிற வீட்டு அத்தியாவசிய பொருட்களையும் வழங்குகிறது.

12. இதுவரை, Zomato $2.1 பில்லியன் நிதி திரட்டியுள்ளது மற்றும் கடைசி சுற்றில் $5.4 பில்லியனாக நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

13. Zomato "தக்காளி" என்னும் வார்த்தையில் இருந்து வந்தது.

14. ஜூன் 24, 2022 அன்று, சொமாட்டோ Blinkit என்னும் நிறுவனத்தை 568 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.

மேலும் படிக்க | வரிச் சலுகையுடன் நல்ல வருமானம் தரும் FD... 8.1% வட்டியுடன் வரி சேமிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News