கடந்த சில ஆண்டுகளில், இந்தியா உட்பட உலகம் முழுவதும் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு மிக வேகமாக அதிகரித்துள்ளது. இப்போதெல்லாம் ஜிம்முக்கு சென்று ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். மற்றவர்கள் ஜிம்மிற்குச் செல்வதைப் பார்த்து அல்லது நண்பர்களின் சிக்ஸ் பேக் வைத்ததை பார்த்து உடற்பயிற்சி செய்ய தொடங்குவது நல்லது என்றாலும், அதில் இருக்கும் ஆபத்துகளையும் தெரிந்து கொள்ளுங்கள். சிலர், பிறரைப் பார்த்துக் கொண்டே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அழுத்தத்தால், தங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான முடிவு வெளியாகியிருக்கிறது. உடற்தகுதி மீது சமூகத்தில் கட்டமைக்கப்படும் கருத்துருவாக்கம் ஒருவர் மீது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்குகிறது. இதனால் உடற்பயிற்சி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் முறையற்ற வகையில் செய்யும் உடற்பயிற்சிகள் ஆரோக்கியத்தை கெடுத்துவிடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க.. ‘இந்த’ விஷயங்களை தினமும் செய்யுங்கள்!


உடற்பயிற்சியால் எழும் ஆபத்து


Lululemon இதழ் உலகளாவிய நல்வாழ்வு 2024 அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது ஆரோக்கியமாக இருக்க வேண்டிய அழுத்தம் மக்களை நோய்வாய்ப்படுத்துகிறது என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஆரோக்கியமாக இருக்க வேண்டிய அழுத்தம் மக்களிடையே மன அழுத்தத்தை உருவாக்குகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சர்வேயில், 89 சதவீதம் பேர் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக உடற்பயிற்சி செய்வதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்களை சிறப்பாகக் காட்டுவதற்காக சமூகத்தில் இருந்து மிக உயர்ந்த எதிர்பார்ப்புகள் இருப்பதாக நம்பினர். இந்த அழுத்தத்தின் காரணமாக, கிட்டத்தட்ட பாதி மக்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நோய்வாய்ப்படுகிறார்கள்.


உடற்பயிற்சி குறித்து ஆய்வு சொல்வது என்ன?


Lululemon தலைமை நிர்வாக அதிகாரி கால்வின் மெக்டொனால்ட் கூறுகையில், 'உலகம் முழுவதும் உள்ள மக்களின் ஆரோக்கியம் குறித்த புதிய தகவல்களை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த தகவலின் மூலம் மக்களை ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று நம்புகிறோம். உலகம் முழுவதும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. ஆனால், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 61% பேர், தங்களைப் பற்றிச் சிறப்பாகத் தோற்றமளிக்க சமூகத்தில் பல எதிர்பார்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். 53% பேர், சில சமயங்களில் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த தவறான தகவல்களில் சிக்கிக் கொள்வதாகக் கூறுகிறார்கள். இந்த அழுத்தத்தின் காரணமாக தனிமைப் பிரச்சனையும் தங்களுக்குள் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.


மக்கள் என்ன செய்ய வேண்டும்?


நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்கள் வேகம் மற்றும் சகிப்புத்தன்மைக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யுங்கள். காலை மாலை பூங்காவில் வாக்கிங் செல்லுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இயற்கையோடு நேரத்தை செலவிடவும். மற்றவர்களுடன் பழகுவதை உடற்பயிற்சி ஊக்குவிப்பதாகவும், அதனால் குழுவாக சேர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானது என்றும் ஆய்வு கூறுகிறது. நல்வாழ்வு என்பது உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நீங்கள் எடுக்கும் செயல்பாடுகள் தானே தவிர பிறருக்காக எதையும் செய்து ஆபத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம். ஆரோக்கியமான உடற்பயிற்சி, நல்வாழ்வை அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.


மேலும் படிக்க | முகப்பருவுக்கு குட்பை-பொடுகுக்கு டாட்டா…இரண்டுக்கும் ஒரே டிப்ஸ்! என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ