Palmistry: எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய யாருக்குத்தான் ஆவல் இருக்காது. பிறந்த தேதி மற்றும் இடம் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரியும் என்றாலும், பலருக்கு பிறந்த நேரம் பற்றிய விபரங்கள் சரியாக தெரியாது. ஜாதகம் கணிக்க முடியாத நிலையில் இருக்கும், அப்படிப்பட்டவர்களுக்கு கைகொடுப்பது தான் கைரேகை. அத்தகையவர்களுக்கு, கைரேகை மற்றும் எண் கணிதம் மிகவும் உதவியாக இருக்கும். கைரேகை உதவியுடன், நபரின் வேலை-வணிகம், அதிர்ஷ்டம், திருமணம், உடல்நலம் போன்றவற்றைப் பற்றி பல விஷயங்களை அறிந்து முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வால்மீகி முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட கைரேகை சாஸ்திரம் என்பது இந்தியாவின் ஜோதிட சாஸ்திரத்தில்  இருந்து தோன்றிய சாஸ்திரமாக கருதப்பட்டு வருகிறது.   ஒருவரின் கைவிரல் ரேகை மற்றவர்களின் ரேகையோடு ஒருபோதும் ஒத்துப் போவதில்லை. அதனால் தான் அவை பல்வேறு இடங்களில் அடையாள சான்றாக கருதப்பட்டு, எழுத படிக்க தெரியாதவர்கள் கை ரேகையை வைக்கும் பழக்கம் இருந்தது. நவீன யுகத்தில் ஆதார் அட்டை போண்றவற்றில் கைரேகை விபரங்கள் சேர்க்கப்படுகின்றன. ஒரு தனி மனிதனின் அடையாளமாக கைரேகை விளங்குவதால் கைரேகை ஜோதிடம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.


செல்வம்-சொத்து- வாழ்க்கைக் கோட்டிலிருந்து ஒரு கிளை சனி மலையை நோக்கிச் சென்று எழுந்து விதியின் பாதையில் நகர்ந்தால், அந்த நபருக்கு செல்வத்திற்கும் சொத்துக்கும் பஞ்சமில்லை. அவர் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்.


நம்முடைய கைரேகையில் நிறைய ரேகைகள் காணப்பட்டாலும் நான்கு ரேகைகள் மட்டும் அழுத்தமாக அமைந்திருக்கும்.


ஆயுள்ரேகை: மணிக்கட்டிலிருந்து கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வில் போன்று வளைந்து செல்லும் ரேகை தான் ஆயுள் ரேகை. இதன் நீளம், அடர்த்தி போன்றவற்றை வைத்து ஒருவரின்  ஆயுள், உடல் ஆரோக்கியம், எதிர்காலம் ஆகியவற்றை குறிக்கிறது. ஆயுள் ரேகை நீளமாக இருந்தால்  ஆயுள் அதிகமாக இருக்கும். சீராக இல்லாமல் இடையில் வளைந்து வளைந்து சென்றால் ஆரோக்கிய பிரச்சனைகள் அவருக்கு அதிகமாக இருக்கும்.


இருதய ரேகை: சுண்டு விரலுக்கு கீழே ஆரம்பித்து ஆள்காட்டி விரலை நோக்கி நீளமாக அமைந்துள்ள ரேகையை இருதய ரேகை.  இந்த ரேகை ஆள்காட்டி விரலுக்கு மேலே சென்றால் அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும். கை விரல்களுக்கு இடையில் செல்லாமல் மேட்டை நோக்கிய நிலையில் இந்த ரேகை  இருந்தால் புத்திசாலிகளாக இருப்பார்கள். கை விரல்களுக்கு இடையில் பள்ளத்தை நோக்கி செல்பவர்களுக்கு பொறுமை இருக்காது. 


புத்தி ரேகை: ஆயுள் ரேகையிலிருந்து பிரிந்து இருதய ரேகைக்கு நடுவில் செல்லும் ரேகை புத்தி ரேகை என்பார்கள். இந்த புத்தி ரேகை மணிக்கட்டை நோக்கி மடங்கி  மணிக்கட்டை நோக்கி சென்றால் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். மணிக்கட்டை நோக்கி திரும்பாமல், சுக்கிர மேட்டை நோக்கி சென்றால் புத்திசாலிகளாக இருப்பார்கள். ஆயுள் ரேகையும், புத்தி ரேகையும் சேர்ந்து இல்லாமல் தனித்தனியே பிரிந்து காணப்பட்டால் தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.


விதி ரேகை: இந்த ரேகை மணிக்கட்டிலிருந்து இருதய ரேகைக்கும் புத்தி ரேகைக்கும் இடையில் நேராக செல்லும்  ரேகை.  இந்த ரேகை செல்வத்தையும், வளத்தையும் குறிக்கும். இது எந்த அளவிற்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் அதிகம் இருக்கும். ஒரு சிலருக்கு இந்த ரேகையே இருக்காது. அவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெரும் போராட்டமாக இருக்கும்.


ALSO READ | Tamil Horoscope 11 July 2021: இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி இருக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR