20 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பான், ஆதார் அவசியம்: CBDT
CBDT வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், இருபது லட்சத்திற்கு அதிகமாக டெபாசிட்டுகள் செய்யவும், வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கும் பான் அல்லது ஆதாரை வழங்குவது கட்டாயமாகும் எனக் கூறியுள்ளது.
ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ அல்லது நடப்புக் கணக்கைத் தொடங்கவோ பான் அல்லது ஆதார் எண்களை மேற்கோள் காட்டுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), ஒரு அறிவிப்பில், ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ அல்லது நடப்புக் கணக்கைத் தொடங்கவோ, நிரந்தர கணக்கு எண் (PAN) அல்லது பயோமெட்ரிக் ஆதாரை வழங்குவது கட்டாயம் என கூறியுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஏகேஎம் குளோபல் டேக்ஸ் பார்ட்னர் சந்தீப் சேகல், இது நிதி பரிவர்த்தனைகளில் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் என்று கூறினார். இனி வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ரூ. 20 லட்சம் அல்லது அதற்கு மேல் மொத்தமாக டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் குறித்த ஆகியவற்றின் பரிவர்த்தனைகள் குறித்த தகவலை அளிக்க வேண்டும்
"மேலும், டெபாசிட் மற்றும் பணம் எடுப்பதற்கும் கூட PAN ஐப் பெறுவதற்கான கட்டாய நிபந்தனை, பண பரிவர்த்தனை குறித்த தகவலை கண்டறிய அரசாங்கத்திற்கு உதவும். மொத்தத்தில், இது ஏற்கனவே உள்ள TDS உடன் சந்தேகத்திற்குரிய பண முதலீடுகள் மற்றும் பணம் எடுத்தல் தொடர்பான முழு செயல்முறையையும் கணகாணிக்க வழிவகுக்கும். மேலும் வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் 194N விதிகள் ஏற்கனவே உள்ளது," சேகல் கூறினார்.
தற்போது, பான் மற்றும் ஆதார் ஆகியவை வருமான வரி நோக்கத்திற்காக பரஸ்பரம் மாற்றி பயன்படுத்திக் கொள்ளக்கூடியவை.
வருமான வரி செலுத்துபவர் வருமான வரி துறையுடனான அனைத்து தகவல்தொடர்புகளிலும் மற்றும் குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போதும் அவருடைய/அவளுடைய பான் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.
மேலும் படிக்க | HDFC வங்கியின் எக்ஸ்பிரஸ் கார் லோன்; அரை மணி நேரத்தில் கார் கடன்
இருப்பினும், அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர், வெளிநாட்டு நாணயத்தை வாங்குதல் அல்லது வங்கிகளில் இருந்து பெருமளவில் திரும்பப் பெறுதல் போன்றவற்றில் பான் எண் இல்லாத சூழ்நிலைகள் இருக்கலாம்.
நிதிச் சட்டம், 2019, ஆதாருடன் பான் எண்ணை பரஸ்பரம் மாற்றிக் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்துள்ளது.
வருமான வரிச் சட்டத்தின் கீழ் தனது பான் எண்ணை வழங்கவோ அல்லது மேற்கோள் காட்டவோ தேவைப்படும் ஒவ்வொரு நபரும், பான் எண் இல்லாத, ஆனால் ஆதார் எண்ணை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பான் எண்ணுக்குப் பதிலாக பயோமெட்ரிக் ஐடியை வழங்கலாம் என்று வழங்கப்பட்டுள்ளது.
நங்கியா & கோ எல்எல்பி பார்ட்னர் ஷைலேஷ் குமார் கூறுகையில், அத்தகைய நபர் பான் எண்ணை மேற்கோள் காட்டினால், பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பது வரி அதிகாரிகளுக்கு எளிதாக இருக்கும் என்றார்.
"பெரிய பரிவர்த்தனைகளில் ஈடுபடும் ஆனால் பான் வைத்திருக்காத நபர்களை வரி வலையின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கம் அதன் வரி செலுத்துவோர் தளத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது" என்று குமார் கூறினார்.
மேலும் படிக்க | ரிலையன்ஸ் பவர் சாதனையை முறியடித்த LIC IPO; பாலிசிதாரர்கள் அமோக வரவேற்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR