வங்கிக் கணக்கு தொடங்குதல், முதலீடு செய்தல் போன்ற பல நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. சமீப காலமாக, ஆன்லைன் பான் கார்டு மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. பிறரது பான் கார்டு தகவல்களைப் பயன்படுத்திக் ஹேக்கர்கள் மிக எளிதாகக் கடன் வாங்குகிறார்கள். உங்கள் பான் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா இல்லையா என்பதை நீங்கள் எப்படிக் கண்டறியலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். மேலும் உங்களை எவ்வாறு மோசடியில் இருந்து காத்துக் கொள்வது என்பது பற்றியும் அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பான் கார்டு மூலம் மோசடி செய்வது எளிதானதா?


ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, மேலும் பான் கார்டு தகவல்களைப் பயன்படுத்தி செய்யபப்ட்ட மோசடிக்கு இதுவரை பலர் இலக்காகியுள்ளனர். சமீபத்தில், சன்னி லியோன் மற்றும் ராஜ்குமார் ராவ் அவர்கள் கூட இதே போன்ற மோசடியின் சிக்கியதாக தக்வல் வந்தது. உண்மையில், நடிகர் ராஜ்குமார் ராவ், ஃபின்டெக் செயலி மூலம் தனிநபர் கடன் பெறும் வழக்கில் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து தெரிவித்திருந்தார். உண்மையில் ராஜ்குமார் ராவ் தனது CIBIL ஸ்கோர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ட்வீட் செய்து தெரிவித்திருந்தார்.


நீங்களும் இதுபோன்ற மோசடிகளுக்கு ஆளாகாமல் இருக்க விரும்பினால், உங்கள் பான் கார்டை கவனமாக சரிபார்க்கவும். உங்கள் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் எப்படிக் கண்டறியலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் செய்தி: வங்கி அளிக்கும் சூப்பர் பரிசால் அமோக லாபம் 


பான் கார்டை தவறாக பயன்படுத்துவதை தெரிந்து கொள்ளும் முறை


முதலில் உங்கள் CIBIL மதிப்பெண்ணைச் சரிபார்க்கவும். CIBIL ஸ்கோரை அறியவும், CIBIL, Equifax, Experian அல்லது CRIF High Mark போன்ற தளங்களைப் பயன்படுத்தலாம். CIBIL ஸ்கோரைச் சரிபார்த்த பிறகு, உங்கள் பெயரில் ஏதேனும் தவறான கடன் வாங்கப்பட்டுள்ளதா என்பது உங்களுக்குத் தெரிய வரும்.


பேடிஎம் அல்லது பேங்க் பஜாரிலிருந்தும் பான் கார்டு தகவலைப் பெறலாம். இந்த தளங்களில் உங்கள் CIBIL ஸ்கோரையும் சரிபார்க்கலாம். நீங்கள் இங்கே ஏதேனும் கடன் வாங்கியிருந்தால், அதைப் பற்றிய தகவல்களையும் பெறுவீர்கள். இது தவிர, தவறான கடன் வாங்கப்பட்டிருந்தால், அதுவும் எளிதாகக் கண்டறியப்படும்.


உங்கள் பான் கார்டு எண்னை வைத்து வாங்கப்பட்ட கடன் பற்றி அறிய அல்லது உங்கள் பான் கார்டு மோசடி தொடர்பான தகவல்களைப் படிவம் 26A -வை ஆராய்ந்தும் அறிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | PM-WANI: இந்திய ரயில்வே மேம்பட்ட இலவச Wi-Fi வசதி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR