குழந்தைகள் பெற்றோரை விட்டு விலகிச் செல்வது மிகவும் கவலைக்குரிய விஷயம். ஆனால் குழந்தைகள் ஏன் பெற்றோரை விட்டு விலகி செல்கிறார்கள் என்பதற்கான பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுடன் அன்பாக இருக்க விரும்புகின்றனர். ஆனால் எவ்வளவு தான் பாசமாக வளர்த்தாலும் ஒரு சில சமயங்களில் குழந்தைகள் வளரும்போது பெற்றோரிடமிருந்து விலகி செல்கின்றனர். பெற்றோர்கள் செய்யும் சில தவறுகளால் குழந்தைகள் இந்த முடிவை எடுக்க தொடங்குகின்றனர். குழந்தைகளுக்கு தேவையான நேரத்தில் தேவையானதை செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் குழந்தைகள் பெற்றோரிடம் தயங்காமல் சொல்வார்கள். குழந்தைகள் பெற்றோர்களை விட்டு விலகி செல்வதற்கான காரணத்தை தெரிந்து கொண்டால் இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பது எளிதாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பார்லர் செல்ல தேவையில்லை... அழகிய நீண்ட கூந்தலை பெற சில டிப்ஸ்..!!


குழந்தைகள் ஏன் விலகி செல்கின்றனர்?


குழந்தைகளுக்கு எப்போதும் பெற்றோர்களின் அன்பும் பாசமும் தேவை. இன்றைய பிஸியான வாழ்க்கை சூழலில் தினசரி குழந்தைகளிடம் பேசுவதற்கு கூட பெற்றோர்களுக்கு நேரம் இல்லை. சிலர் பெற்றோர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு பலவீனமாகிறது. இதுபோன்ற சூழலில் வேறு யாராவது அக்கறையுடனும், அன்போடும் இருந்தால் குழந்தைகள் அவர்களால் ஈர்க்கப்பட்டு, பெற்றோர்களை விட்டு விலகி செல்கின்றனர். எனவே எவ்வளவு பிஸியான வேலையில் இருந்தாலும், தினசரி குழந்தைகளிடம் உட்கார்ந்து பேச வேன்டும். அவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். 


குழந்தைகள் மீது கவனம்


ஒவ்வொரு குழந்தையும் தனது பெற்றோர்கள் தன்னை மட்டும் தான் நேசிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எனவே பெற்றோரின் கவனம் அவர்கள் மீது தான் அதிகம் உள்ளது என்பதை புரிய வையுங்கள். பெற்றோர்கள் தொடர்ந்து குழந்தைகளை திட்டினாலோ, அவர்களின் பேட்சை கேட்கவில்லை என்றாலோ, மீண்டும் மீண்டும் தவறை சுட்டிக் காட்டினாலோ குழந்தைகளுக்கு நம்பிக்கையை குறைக்கிறது. இதனால் காரணமாக குழந்தைகள் பெற்றோரிடமிருந்து விலகிச் செல்கிறார்கள். குழந்தைகள் செய்யும் சிறு சிறு விஷயங்களை கூட பாராட்ட வேண்டும், அப்போது தான் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


குழந்தை வளர்ப்பு


எப்போதும் குழந்தைகளை ஒரே போல் நடந்த வேண்டும். வேலையில் அல்லது வெளியில் இருக்கும் டென்ஷன்களை குழந்தைகள் மீது திணிக்க கூடாது. இது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தும். மேலும் பெற்றோரிடமிருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு புரியாமல் போகிறது. அதே போல வீட்டில் இருக்கும் கருத்து வேறுபாடு குழந்தைகளை மனதளவில் பாதிக்கிறது. கணவன் - மனைவி இருவரும் குழந்தைகள் முன்பு தொடர்ச்சியாக சண்டை போட்டால், குழந்தைகள் பெற்றோரிடமிருந்து விலகிச் செல்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கான நேரத்தை ஒதுக்காத போது தங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று குழந்தைகள் நினைக்கிறார்கள். இது இருவருக்கும் இடையேயான உறவை பாதிக்கிறது.


மேலும் படிக்க | குழந்தைகளுக்கு முட்டை அதிகம் கொடுக்கலாமா? மருத்துவர்கள் செல்வது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ