கோடை காலத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளை அதிகம் கொடுக்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகம் பல பெற்றோர்களுக்கு உள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முட்டைகள் அதிக சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. பொதுவாக முட்டைகளை குளிர்காலத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று பல பெற்றோர் எண்ணுகின்றனர். கோடை காலத்தில் முட்டை சாப்பிட்டால் உடல் அதிகம் சூடாகும் என்றும் நினைக்கின்றனர்.
முட்டை சாப்பிடுவதால் உடல் அதிகம் சூடாகி குழந்தைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று கொடுக்க மறுக்கின்றனர். உண்மையில், முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
முட்டையில் அதிக அளவு புரதம், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் டி, இரும்புச்சத்து போன்றவை உள்ளன. இவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
முட்டையில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு தவறாமல் முட்டைகளை கொடுக்க வேண்டும்.
கோடைக்காலத்தில் குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை கொடுப்பது நல்லது. இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, ஜீரணிக்கவும் எளிதாகவும் இருக்கும்.
குழந்தைகளுக்கு அதிகமான முட்டைகளை கொடுக்கும் போது உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம். உங்கள் குழந்தைக்கு முட்டைகளை கொடுக்க உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.