தனி விமானத்தில் பயணிப்பது என்பது அரசியல் தலைவர்களுக்கும், பெரிய தொழில் அதிபர்களுக்கும் இயல்பான விஷயம் தான். ஆனால் சாதாரண மனிதர் ஒருவருக்கு கனவிலும் எட்டா கனி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மனி ஒருவருக்கு அந்த அரிய வாய்ப்பு சமீபத்தில் கிடைத்துள்ளது.


கடந்த டிசம்பர் 24-ஆம் நாள், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த Louisa Erispe பெண்மனி, பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் PR 2820-ல் டாவா-விலிருந்து மனிலாவிற்கு பயணித்துள்ளார். இவரது பயணத்தின் போது இவர் மட்டுமே பயணித்துள்ளார். இதற்காக இவர் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தவில்லை., மற்ற பயணிகள் வராத காரணத்தால் விமான பணியாட்களுடன் இவர் மட்டும் தனியாக பயணிக்க நேர்ந்துள்ளது. 



ஆரம்பத்தில் இந்த விவரம் அறிந்து தனியே பயணிக்க பயந்த Louisa Erispe பின்னர் சுதாரித்துக்கொண்டு தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விவரங்களையும் இவர் தனது முகப்புத்தக பதிவின் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார்.


Louisa Erispe-ன் முகப்புத்தக பதிவினை பார்க்கையில், கிடைக்கெப்பெறா இந்த அரிய வாய்ப்பினை இவர் மகிழ்ச்சியாக அனுபவித்தது தெரிகிறது.