5 Tips To Buy New AC in Tamil: தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது.  வெயிலும் அதிக அளவில் உள்ளது, பலரும் வெப்பத்தை தணிக்க பல வழிகளை பின்பற்றுகின்றனர். மின்சார கட்டணம் அதிகமாக வந்தாலும் பரவாயில்லை என்று தற்போது பலரும் வீட்டில் ஏசி வாங்கி வருகின்றனர். ஏசியின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. உடல் அதிகமாக ஹீட் ஆனால் பல்வேறு உடல்நல கோளாறுகளும் வந்துவிடுகிறது. இந்த கோடையில் நீங்களும் ஏசி வாங்க திட்டமிட்டிருந்தால் சில விஷயங்களை தெரிந்து கொண்டு வாங்குவது உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும். இது உங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் மற்றும் நிவாரணத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பைக் விற்பனையில் பட்டையை கிளப்பிய டாப் 6 நிறுவனங்கள் - மார்ச் மாத நிலவரம் இதோ!


ஏசி வாங்கும் முன் எப்போதும் ஏசியின் குளிரூட்டும் திறனைச் சரிபார்த்து வாங்க வேண்டும். அறையை முழுவதும் குளிர்விக்க எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறது, ஏசியில் உள்ள வசதிகள் என்ன என்ன என்பதை தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது. அதே போல உங்கள் வீட்டில் உள்ள அறையின் அளவை பொறுத்து அதற்கேற்ப ஏசியை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் அறை சிறியதாக இருந்தால், சிறிய ஏசியை வாங்கினால் போதும். பெரியதாக இருந்தால், பெரிய மாடலுக்குச் செல்லுங்கள். 90 சதவீத வீடுகளில் ஒன்றரை டன் ஏசி பயன்படுத்தப்படுகிறது. பெரிய ஹால்களில் மட்டும் இரண்டு டன் ஏசி உபயோகத்தில் உள்ளது.



எந்த கம்பெனி ஏசியாக இருந்தாலும்  5-ஸ்டார் ஏசியை தேர்வு செய்யுங்கள். இது உங்கள் அறைக்கு உடனடி கூலிங்கை தந்து மின் கட்டணத்திலும் பணத்தை மிச்சப்படுத்துகிறது. அதிக ஸ்டார் இருந்தால் சிறந்த ஆற்றல் திறன் என்று பொருள். இந்த ஸ்டார் லேபிள்கள் மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தி திறன் பணியகம் (BEE) மூலம் வழங்கப்படுகின்றன, எனவே இவை சீரற்ற முறையில் வழங்கப்படுவதில்லை. இருப்பினும், அதிக நட்சத்திரங்களைக் கொண்ட சாதனங்கள் விலை உயர்ந்தவை, ஏனெனில் அவை சிறந்த ஆற்றல் சேமிப்பு மற்றும் குளிரூட்டும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. 


உங்கள் வீட்டின் அறை சிறியதாக இருக்கும் பட்சத்தில் விண்டோ ஏசி வாங்குவது நல்லது. இது உங்கள் அறையை விரைவாக குளிர்விக்கும். விண்டோ மாடல் ஏசி ஸ்பிலிட் ஏசிகளை விட விலையில் மலிவானவை. உங்கள் அறையில் பெரிய ஜன்னல்கள் இல்லை என்றால், ஸ்பிலிட் ஏசி தான் சரியான தேர்வு. சில பயனர்கள் ஸ்பிலிட் ஏசிகளை அவற்றின் அழகியல் வடிவமைப்பு காரணமாக விரும்பலாம். பெரிய ஷோரூம்களில் ஏசி வாங்கும் போது, ​​ஏசியின் உண்மையான விலையை தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது. சில கடைகள் குறைந்த விலை கொண்ட ஏசிகளை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றன.  மேலும் தொழில்நுட்ப சிக்கல்களை சந்திக்க நேரிடும். 


மேலும் படிக்க | குறைந்த EMI மூலம் கார் வாங்கணுமா... இந்த 5 மாடல்கள் ஈஸியாக கிடைக்கும் - முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ