குறைந்த EMI மூலம் கார் வாங்கணுமா... இந்த 5 மாடல்கள் ஈஸியாக கிடைக்கும் - முழு விவரம்

Best Cars With EMI: 10 ஆயிரம் ரூபாய் மாதத் தவணையில் கார்கள் வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இந்த ஐந்து மாடல்கள் சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 29, 2024, 04:05 PM IST
  • இந்திய சந்தையில் கார்கள் மாதத் தவணையில்தான் அதிகம் விற்பனையாகிறது.
  • கார்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது.
  • இருப்பினும், கார்கள் முதலீடு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குறைந்த EMI மூலம் கார் வாங்கணுமா... இந்த 5 மாடல்கள் ஈஸியாக கிடைக்கும் - முழு விவரம் title=

Best Cars With EMI Under Rs 10 Thousand: கார்கள் வாங்குவது இந்திய சமூகத்தில் மிகப்பெரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம், வீட்டை கட்டிப்பார்... கல்யாணம் செய்து பார் என பழமொழி கூறுவார்கள். ஆனால், இப்போது அதை கார் வாங்கிப் பார், அதற்கு EMI கட்டிப் பார் என்றாகிவிட்டது. குடியிருக்கும் வீடு தொடங்கி மொபைல், லேப்டாப், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டூ வீலர் என அனைத்தும் மாதத் தவணையில் தற்போது வாங்கிவிடலாம். 

இந்தியா போன்ற நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் உள்ள நாட்டில் கார்கள் போன்றவற்றை வாங்குவது ஆடம்பரமாகிறது. கார் வாங்குவது ஒருபுறம் என்றால் அதற்கென பாதுகாப்பான இடத்தை பார்க்கிங்கிற்கு பிடிப்பது, காரை சரியான நேரத்திற்கு சர்வீஸ் செய்வது போன்றவறை அதிகம் கவனம் செலுத்த வேண்டியது. மேலும், கார்களுக்கு ஏற்படும் செலவுகளும் சாதரணமானது அல்ல. 

குறிப்பாக, கார்கள் முதலீட்டில் வராது. அதேபோல், அதில் தொடர்ந்து பராமரிப்பு செலவுகளும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், கார் உங்களை பல இடங்களுக்கு அசதியின்றி விரைவாக செல்ல உதவக்கூடிய ஒன்றாகும். வீட்டில் பெரியவர்கள் அல்லது குழந்தைகள் இருக்கும்போது கார் வைத்திருப்பது கூடுதல் நன்மைதான். டூ வீலர் இவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காது, வெளியே செல்லும் போதெல்லாம் கார், ஆட்டோவை வாடகைக்கு எடுப்பதும் சிரமம்தான். 

மேலும் படிக்க | புதிய பல்சர் வந்தாச்சு.. இனி சிட்டாக பறக்கலாம் - விலை, மைலேஜ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

அந்த வகையில், சில நடுத்தர குடும்பங்களுக்கு கார் என்பது அத்தியாவசியமாக இருக்கும். அதே நேரத்தில், அவர்கள் குறைந்த தொகையில் மாதத் தவணை செலுத்தி கார்களை வாங்க நினைப்பார்கள். அத்தகையோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த 5 கார்கள் உள்ளன. இந்த கார்கள் குறித்தும், அதன் மாதத் தவணை திட்டம் குறித்தும் இதில் காணலாம். 

Maruti Suzuki Alto K10

இந்த காரின் விலை 3.99 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதற்கு ஆரம்ப தொகையாக ரூ.39 ஆயிரத்தை (10%) நீங்கள் செலுத்தினால், மாதத் தவணை 5,687 ரூபாய் கொடுத்தால் போதும்.

Tata Tiago 

நகர்புறத்தில் சிறந்த அனுபவத்தை அளிக்கும் டாடா நிறுவனத்தின் இந்த காரின் விலை 5.59 லட்சம் ரூபாய் ஆகும். இதில் 10% அதாவது, 55 ஆயிரம் ரூபாயை வங்கியில் ஆரம்ப கட்டணமாக செலுத்தினால், 7 ஆயிரத்து 980 ரூபாயை மாதத் தவணையாக செலுத்தலாம். 

Maruti Suzuki Celerio

இதன் விலை 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 ஆகும். இதல் 10% அதாவது 53 ஆயிரத்து 650 ரூபாயை முதல்கட்டமாக செலுத்தினால், மாதத் தவணையாக 7 ஆயிரத்து 647 ரூபாயை நீங்கள் செலுத்தலாம்.

Hyundai Grand I10 NIOS

இந்த காரின் ஆரம்ப விலை 5 லட்சத்து 84 ஆயிரத்து 350 ரூபாய் ஆகும். இதன் விலையில் 10% அதாவது, 58 ஆயிரத்து 435 ரூபாயை செலுத்தினால், இதற்கு 8 ஆயிரத்து 329 ரூபாய் மாதத் தவணையாக செலுத்தலாம். 

Maruti Suzuki Wagon R

இந்த காரின் ஆரம்ப விலை 5 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். இதன் விலையில் 10% அதாவது, 55 ஆயிரத்து 450 ரூபாயை செலுத்தினால், இதற்கு 7 ஆயிரத்து 903 ரூபாய் மாதத் தவணையாக செலுத்தலாம். 

மேலும் படிக்க | ஜனவரியில் டாப் 10 கார்கள் இதுதான்... விற்பனையில் அடித்து நொறுக்கும் மாருதி சுசுகி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News