கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி, பிரதமர் மோடி தனது சொந்த கைகளால் 7 வது தவணைத் தொகையை விவசாயிகள் கணக்கிற்கு அனுப்பினார், உங்கள் கணக்கில் ரூ.2000 பெறவில்லை என்றால், இங்கே புகார் செய்யுங்கள்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PM கிசான் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு (PM Kisan Samman Nidhi) மூன்று தவணையாக வருடத்திற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையின் போதும் ரூ.2000 வழங்கப்படும். கடைசியாக, இந்த டிசம்பர் 26 அன்று 7 ஆம் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது. நீங்களும் இந்த திட்டத்தின் பயனாளியாக இருந்து, பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு (Bank Account) வந்துவிட்டதா இல்லையா என்று தெரியாமல் இருந்தால், அதை எப்படி சரிபார்ப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.


பொதுவாகவே, பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்தவுடன் உங்கள் பதிவுசெய்யப்பட்ட எண்ணிற்கு SMS வந்துவிடும். ஒரு வேளை SMS வருவதில் சிக்கல் என்ற நிலையில் இதை சரிபார்க்க முடியவில்லை என்றால், ஆன்லைன் (Online) மூலம் இந்த தகவலை சரிப்பார்கலாம். அதற்கு உங்களிடம் ஆதார் எண் அல்லது வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்.


> முதலில் நீங்கள் உங்கள் போனில் browser ஐத் திறக்க வேண்டும்.
> அதில் உள்ள Search Bar பகுதியில் PM Kisan Beneficiary Status என்று டைப் செய்ய வேண்டும்.
> கூகிளில் தோன்றும் Beneficiary Status என்னும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். 
> அதை கிளிக் செய்ததும் PM கிசான் சம்மன் நிதி வெப் போர்டல் திறக்கப்படும். 
> அங்கு Aadhar Number, Account Number, Mobile Number என மூன்று விருப்பங்கள் இருக்கும். 
> அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து, எடுத்துக்காட்டாக மொபைல் எண்ணை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால், உங்கள் மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுத்து Get Data என்பதை கிளிக் செய்யவும்.
> அதில் உங்களுக்கு அனைத்து  தவணை விவரங்களும் காண்பிக்கப்படும்.
> அதன் மூலம் 7 ஆம் தவணை உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதா இல்லையா என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.


ALSO READ | PM Kisan Samman Nidhi இன்று வழங்கப்படுகிறது: 10 முக்கிய விஷயங்கள்!


கிசான் சம்மன் நிதி திட்டத்தின் ஏழாவது தவணையான 18000 கோடியை 9 கோடி விவசாயிகள் கணக்கில் டிசம்பர் 25 அன்று பிரதமர் மோடி (PM Modi) வெளியிட்டுள்ளார். இந்த தொகை பெரும்பாலான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளிலும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நீங்க பணம் பெறுவதற்கான தகுதி இருந்தும் உங்களின் வங்கி கணக்கில் பணம் வரவு செய்யப்படவில்லை என்றால், உங்கள் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம். நீங்கள் முழுமையான தகவல்களை https://pmkisan.gov.in இல் பெறலாம்.இதுக்கு நீங்கள் எவ்வளவு தவணை பெற்றுள்ளீர்கள் என்பதையும் அறியலாம்.


> முதலில், PM Kisan (PM Kisan) இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் https://pmkisan.gov.in/.


> இங்கே நீங்கள் வலதுபுறத்தில் 'Farmers Corner' என்ற விருப்பத்தைக் காண்பீர்கள்.


> இங்கே 'Beneficiary Status' விருப்பத்தை சொடுக்கவும். ஒரு புதிய பக்கம் இங்கே திறக்கப்படும்.


> புதிய பக்கத்தில், ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணிலிருந்து விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.


> நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தின் எண்ணை நிரப்பவும். இதற்குப் பிறகு, 'Get Data' என்பதைக் கிளிக் செய்க.


> இங்கே கிளிக் செய்த பிறகு, எல்லா பரிவர்த்தனைகளையும் பற்றிய தகவல்களைப் பெறுவீர்கள், அதாவது, உங்கள் கணக்கில் எந்த தவணை வந்தது, எந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.


> ஏழாவது தவணை தொடர்பான தகவல்களையும் நீங்கள் காண்பீர்கள்.


'FTO is generated and Payment confirmation is pending' என்று நீங்கள் கண்டால், நிதி பரிமாற்ற செயல்முறை தொடங்கியது மற்றும் இந்த தவணை சில நாட்களில் உங்கள் கணக்கில் மாற்றப்படும்.


இந்த எண்ணில் புகார் செய்யுங்கள்


பலரின் பெயர்கள் முந்தைய பட்டியலில் இருந்தன, ஆனால் புதிய பட்டியலில் இல்லை, பின்னர் நீங்கள் பிரதமர் கிசான் சம்மனின் ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளிக்கலாம். இதற்காக, நீங்கள் 011-24300606 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம்.


ALSO READ | PM-KISAN திட்டத்தின் ஏழாவது தவணை எவ்வாறு பெறுவது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்!


அமைச்சகத்தை எவ்வாறு தொடர்பு கொள்வது


PM கிசான் கட்டணமில்லா எண்: 18001155266


PM கிசான் ஹெல்ப்லைன் எண்: 155261


PM கிசான் லேண்ட்லைன் எண்கள்: 011—23381092, 23382401


PM கிசானின் புதிய ஹெல்ப்லைன்: 011-24300606


PM கிசானுக்கு மற்றொரு ஹெல்ப்லைன் உள்ளது: 0120-6025109


மின்னஞ்சல் ID: pmkisan-ict@gov.in


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR