Happy Pongal 2024: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படும். தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று பெரும்பாலான வீடுகளில் சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் என்பது தவிர்க்க முடியாத உணவாக உள்ளது. நல்ல சுவையாக இருக்க வேண்டும் என்று நாம் இதில் அதிகளவு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து செய்வோம். ஆனால் டயட் இருப்பவர்களுக்கு ஏதேனும் இதுபோன்ற பண்டிகை காலம் வந்தாலே கலோரி குறைவாக சாப்பிடுவதற்கு மிகவும் சிரமப் படுவார்கள். அந்தவகையில் டயட் இருப்பவர்கள் இந்த பொங்கல் பண்டிகைக்கு திணை பொங்கல் செய்து சாப்பிடலாம். ஏனெனில் ஓட்ஸில் அதிக அளவு நார்சத்து நிரம்பியுள்ளது. எனவே இந்த உணவை சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திணை பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:


திணை- 2 கப், பாசிப்பருப்பு - 1 கப், இஞ்சி - 1 துண்டு, செக்கு தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி, தண்ணீர் - தேவையான அளவு, மிளகு - சிறிதளவு, சீரகம் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, முந்திரி பருப்பு - சிறிதளவு


மேலும் படிக்க | பொங்கல் ராசிபலன்: தை முதல் இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி, செல்வம், வெற்றி...அனைத்தும் பொங்கும்!!


திணை பொங்கல் செய்முறை:


முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து வரகரிசியை அதில் இட்டு நன்கு ஊற வைக்கவும். ஒரு வாணலியில் பாசிப்பருப்பை ஆகியவற்றை தனித்தனியாக லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு அதை ஊற வைத்துள்ள வரகரிசியுடன் சேர்த்து அலசி எடுத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சியை தோலைச் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதேபோல் பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும். அதன்பின் மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.


பிறகு குக்கரில் திணை, பாசிப்பருப்பை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு மற்றும் 3 கப் தண்ணீரை விட்டு மூடி 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சற்று ஆறியவுடன், குக்கரைத் திறந்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.


அதன்பின் வாணலில் சிறிதளவு செக்கு தேங்காய் எண்ணெயை விட்டுச் சூடாக்கவும். பிறகு அதில் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மிளகு, சீரகப் பொடியைப் போட்டு வருத்துக்கொள்ளவும். அதன் பின் பொங்கலின் மேல் இந்த தாளிப்பு கலவையை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும். இதோ சுவையான திணை பொங்கல் ரெடி.


ஓட்ஸ் பொங்கல் செய்முறை:


ஊட்டச்சத்து மிக்க ஓட்ஸ் பொங்கல் செய்முறையை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 2 கப்
பாசி பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 2 அளவு
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
முந்திரி - 1 ஸ்பூன்
உப்பு, நெய் - போதுமான அளவு


செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சுத்தம் செய்து நன்கு பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும். தொடர்ந்து கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய்யுடன் ஓட்ஸ் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின் பொங்கல் செய்ய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, 1 ஸ்பூன் நெய்யுடன் பாசி பருப்பு சேர்த்து நன்கு வறுக்கவும். பின் 5 கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி நன்கு கொத்தி வைக்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும் நிலையில் அதில் உப்பு, பச்சை மிளகாய் மற்றும் ஓட்ஸினை பதமாக சேர்த்து கிளறி - வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். இதனிடையே கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து நெய்யுடன் கடுகு, கடலை பருப்பு, மிளகு, சீரகம், முந்திரி, உளுந்து உள்ளிட்டவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின் இந்த தாளிப்பினை தயாராக உள்ள ஓட்ஸ் பொங்கலில் சேர்த்து கிளறி விட சுவையான ஓட்ஸ் பொங்கல் தயார்.


மேலும் படிக்க | Sun Transit 2024 : ரவி யோகம் மற்றும் சித்தி யோகத்தால் பயனடையும் ராசிகள்! தை சங்கராந்தி ராசிபலன் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ