அதிக லாபம் வேண்டுமா? போஸ்ட் ஆபிசின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!
அரசாங்கம் வழங்கும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் நீங்கள் ரூ.100 முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்துகொள்ளலாம்.
வயதான காலத்தில் சேமிப்பதை விட பணியிலிருக்கும்போதே ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து சிறுக சிறுக சேமித்து இறுதியில் பெரிய தொகையை பெற்று நிதி சிக்கல் இல்லாமல் நிம்மதியாக வாழலாம். முதலீடு செய்வதை விட முக்கியமானது திட்டமிடுதல். எங்கு முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், நம்முடைய பணத்திற்கு எவ்வளவு வட்டி கிடைக்கும், நமக்கு இது பலன் தருமா என ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து திட்டமிட்டு பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச மற்றும் பாதுகாப்பான வருமானத்தை பெற தபால் அலுவலகத்தின் சேமிப்பு திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அரசாங்கம் வழங்கும் இந்த ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் நீங்கள் ரூ.100 முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | mAadhaar பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவையா?
இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தின் முதிர்வு காலத்தை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக 18 வயது முதல் பங்களிக்க தொடங்கலாம், இதில் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. மைனர் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்கள் இந்த திட்டத்தில் கணக்கை தொடங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தில் பணத்தை சேமிப்பது மட்டுமின்றி நீங்கள் கடனும் பெற்றுக்கொள்ளலாம், உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50% தொகையை கடனாக பெற்றுக்கொள்ளலாம், இதனை 12 தவணைகளாக திருப்பி செலுத்தி கொள்ளலாம்.
போஸ்ட் ஆபீசின் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 தொகையை முதலீடு செய்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.16 லட்சத்துக்கு மேல் கிடைக்கும். அதாவது ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் டெபாசிட் செய்யும்பொழுது ஒரு வருடத்தில் ரூ.1,20,000 கணக்கில் வரும், இந்த தொகை 10 ஆண்டுகளில் ரூ.12 லட்சமாக இருக்கும். இந்த திட்டத்தின் முதிர்ச்சியை வட்டி மொத்தமாக சேர்த்து ரூ.4,26,476 ரூபாய் கிடைக்கும், மொத்தம் 10 ஆண்டின் முதிர்விற்கு பிறகு உங்களுக்கு மொத்தமாக ரூ.16,26,476 கிடைக்கும்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு Bill-ஐ Google Pay மூலம் செலுத்தலாம்; ஈஸியான வழிமுறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ