மக்கள் பலரும் பணத்தை பாதுகாப்பான இடங்களில் முதலீடு செய்வதையே விரும்புகின்றனர், மேலும் முதலீடு செய்யும் தொகைக்கு சிறந்த வருமானம் பெற வேண்டும் என்பது அவர்களின் முதன்மையான விருப்பமாக உள்ளது.  மக்களுக்கு நம்பிக்கை தரும் முதலீட்டு திட்டங்களை மற்ற இடங்களை காட்டிலும் போஸ்ட் ஆபீஸ் தான் வழங்குகிறது, இதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த வட்டி விகிதத்துடன் கூடிய வருமானத்தையும், பாதுகாப்பையும் பெற முடியும்.  பலவகையான சிறு சேமிப்பு திட்டங்களை போஸ்ட் ஆபீஸ் வழங்குகிறது, இது கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களுக்கு சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் திகழ்கிறது.  இப்போது போஸ்ட் ஆபிஸால் வழங்கப்படும் பிஓஎம்ஐஎஸ் திட்டம் முதலீட்டாளருக்கு சிறந்த பலனை தருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு அதிர்ச்சி! முக்கிய விதிகளில் மாற்றங்கள், அரசு உத்தரவு


போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது, இது 5 வருட லாக்-இன் காலத்துடன் வருகிறது மற்றும் இதில் தனிநபரின் அதிகபட்ச முதலீடு வரம்பு ரூ.4.5 லட்சமாகவும், கூட்டுக் கணக்கின் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.9 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதம் முடிந்தவுடன் மற்றும் முதிர்வு வரை வட்டி செலுத்தப்படும்.  டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள்ளாக எந்த டெபாசிட்டும் வழங்கப்படமாட்டாது என்று திட்டவட்டமாக போஸ்ட் ஆபிசின் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் ஒரு வருடத்திற்குப் பிறகு மற்றும் கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கணக்கு மூடப்பட்டால் முதலீடு செய்யப்பட்ட அசல் தொகையிலிருந்து 2% கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும் என்று போஸ்ட் ஆபீஸ் தெரிவித்துள்ளது.  கணக்கு முதிர்வின் போது போஸ்ட் ஆபிசில் பாஸ்புக்குடன் சேர்த்து விண்ணப்பத்தை சமர்ப்பித்து கணக்கை மூட வேண்டும்.  அஞ்சல் அலுவலக மாத வருமான திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.4,50,000 முதலீடு செய்தால், மாத ஓய்வூதியம் அல்லது ரூ.2,512 அல்லது ஆண்டுக்கு ரூ.30,144 வருமானம் கிடைக்கும்.  ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கின் முதிர்ச்சியில் உங்களுக்கு ரூ.4.5 லட்சம் கிடைக்கும், இவை அனைத்தையும் சேர்த்து மொத்தமாக உங்களுக்கு ரூ.6,00,720 கிடைக்கும்.


மேலும் படிக்க | EPFO: ஓய்வூதிய திட்டத்தில் அசத்தல் மாற்றங்கள், மக்களுக்கு பம்பர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ