மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது நாட்டின் சாமானிய மக்களுக்கான சிறந்த விபத்து காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டம் ஒரு வருடத்திற்கான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படலாம். இது விபத்து காரணமாக இறப்பு அல்லது ஊனத்திற்கான காப்பிட்டை வழங்குகிறது. இங்கு விபத்து என்பது வெளிப்புற காரணங்கள், வன்முறை போன்ற பிற காரணங்களால் ஏற்படும் திடீர், எதிர்பாராத மற்றும் விருப்பமில்லாத நிகழ்வு. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த திட்டம் ஆண்டு பிரீமியமாக ரூ 20 மட்டுமே செலுத்த வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறைந்த அளவு வருமானம் கொண்ட மக்களுக்கு, அவர்களுக்கான வாழ்க்கைக்கு பாதுகாப்பை அளிக்கும் நோக்கத்தில் 2015 ஆம் ஆண்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ம் தேதி முதல் மே 31 ம் தேதிக்குள் ப்ரீமியம் தொகையை செலுத்த வேண்டும். ப்ரீமியம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு அடுத்த வருடத்தில் இருந்து தொடங்கும்.


PMSBY திட்டத்தில் பலனைப் பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


18 முதல் 70 வயது வரை உள்ள மற்றும் வங்கிகள்/அஞ்சலகங்களில் தனிநபர் அல்லது கூட்டுக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள். ஒரு நபர் ஒன்று அல்லது வெவ்வேறு வங்கிகள்/அஞ்சலகங்களில் பல கணக்குகளை வைத்திருந்தால், அந்த நபர் ஒரே ஒரு வங்கி/அஞ்சல் அலுவலக கணக்கு மூலம் மட்டுமே திட்டத்தில் சேர தகுதியுடையவர். கூட்டுக் கணக்காக இருந்தால், அந்தக் கணக்கில் உள்ள அனைவரும் திட்டத்தில் சேரலாம். ஆட்டோ டெபிட் மூலம் ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ. 20 வீதம் பிரீமியம் செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | அடிப்படை ஊதியத்துடன் இணைகிறதா 53% அகவிலைப்படி? எக்கச்சக்கமாய் எகிறப்போகும் சம்பளம்


PMSBY திட்டத்தில் ​​எவ்வளவு கவரேஜ் கிடைக்கும்?


பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளி விபத்து, இயற்கை பேரழிவு, கொலையினால் ஏற்படும் மரணம், உள்ளிட்ட வேறு சில இறந்தால், அவரது நாமினி அல்லது குடும்ப உறுப்பினர் ரூ.2 லட்சம் பலன் பெறுகிறார். இது தவிர, விதிகளின்படி, விபத்து ஏற்படடும் நிலையில், இரண்டு கண்களும் முழுமையாக மற்றும் ஈடுசெய்ய முடியாத இழப்பு அல்லது இரண்டு கைகள் அல்லது கால்கள் செயலிழத்தல் அல்லது ஒரு கண் பார்வை இழப்பு மற்றும் கைகள் அல்லது கால்கள் செயலிழப்பு ஆகியவற்றுக்கு 2 லட்சம் கிடைக்கும். மேலும், விபத்து காரணமாக ஒரு கண் முழுமையாகவும், சரிசெய்ய முடியாததாகவும் பார்வை இழந்தாலோ, ஒரு கை அல்லது கால் செயலிழந்தாலோ, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.


விபத்து அல்லது குற்றத்தினால் ஏற்படும் மரணம் அல்லது ஊனத்திற்கு எதிராக காப்பீட்டு தொகையை பெற காவல்துறையின் எப்ஐஆர் என்னும் முதல் தகவல் அறிக்கை கண்டிப்பாக தேவை. விலங்குகள் தாக்குதல், அல்லது மரத்தில் இருந்து விழுவது போன்ற எதிர்பாராத விபத்தினால் ஏற்படும் ஊனம் மற்றும் மரணத்திற்கு மருத்துவமனை அறிக்கையே போதுமானது. அதாவது விபத்தை உறுதிப்படுத்தும் ஏதேனும் ஒரு சான்று மிகவும் அவசியம். தற்கொலைக்கு கவரேஜ் இல்லை.


பிரீமியம் செலுத்தும் முறை


இந்தத் திட்டத்தில் பதிவு செய்யும் பயனாளி, ஆண்டு பிரீமியமான ரூ.20 என்ற தொகையை, ஆட்டோ டெபிட் வசதி மூலம் கணக்குதாரரின் வங்கி/அஞ்சல் அலுவலகக் கணக்கில் இருந்து ஒரு தவணையில் கழிக்கப்படும். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற பொது காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஜூன் 1 முதல் மே 31 வரையிலான ஒரு வருட காலத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | SIP Mutual Fund: மாதம் ரூ.12,000 முதலீட்டை... ரூ.2 கோடியாக பெருக்கும் 12x12x24 ஃபார்முலா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ