இன்று பிரதோஷம், சிவனின் அருளால் இவர்களுக்கு நினைத்ததெல்லாம் கிடைக்கும்
பிரதோஷத்தின் போது, சிவன் கோயிலுக்குச் சென்று, நந்தியம் பெருமானையும் ஈசனையும் தரிசித்து வேண்டுவது, எல்லா நலனையும் வளத்தையும் வழங்கும்.
சிவாலயங்களில், பிரதோஷ பூஜை சிறப்புறக் கொண்டாடப்படுவது வழக்கம். பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், அற்புதமான ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும். பிரதோஷத்தில் நித்தியப் பிரதோஷ, பிரளய பிரதோஷம், பட்சப் பிரதோஷம் என மொத்தம் இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
இன்று பிரதோஷம் ஆகும். எனவே பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்யுங்கள். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும். எனவே இந்த நாளில், மறக்காமல் பிரதோஷ தரிசனம் செய்யுங்கள். வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது ஐதீகம்.
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்
பிரதோஷ தினத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவ பெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடப்பது வழக்கம். இந்த நேரத்தில் நந்தி பகவான் தன் தக்கோலத்தைக் களைத்து சிவ பெருமானை நினைத்து விரதமிருந்து வழிபடுவோரின் கோரிக்கையைக் கேட்டு நிறைவேற்றுவார்.
மாதத்தில் இரண்டு பிரதோஷம் வரும். வளர்பிறை, தேய்பிறை ஆகும். இந்த பிரதோஷ தினத்தில் விரதமிருக்க விரும்புபவர்கள் அன்றைய தினம் காலையில் எழுந்து குளித்து வீட்டிலேயே விளக்கேற்றி சிவ பெருமானை வழிபட்டு விரதத்தை தொடங்கலாம்.
பிரதோஷ தினத்தில் மாலையில் சிவாலயத்திற்கு சென்று நந்தியையும், சிவ பெருமானையும் வழிபடுவது மிகச்சிறந்த நற்பலனைத் தரும். நந்தி பகவானுக்கு அறுகம்புல் மாலை சாற்றியும், நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். பிரதோஷ தினத்தில் சிவாலயத்தில் எப்படி வலம் வந்து வணங்க வேண்டுமோ அப்படி வலம் வந்து வணங்கி இறைவனின் அருளைப் பெறலாம்.
மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை பொறுப்பேற்க்காது.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR