Lifestyle News Tamil Latest : கொழுப்பு கல்லீரல் நோய் நவீன வாழ்க்கை முறை மாற்றங்களால் அதிகரித்துள்ளது. கல்லீரலில் கொழுப்பு அதிகரிப்புக்கு மிக முக்கிய காரணம், அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதால் இதனை தடுப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றமே கொழுப்பு கல்லீரல் போன்ற உயிருக்கும் உடலுக்கும் ஆபத்தான நோய்களுக்கு அடிப்படையாகின்றன. வீட்டில் நன்கு சமைத்த உணவுகளை பதப்படுத்தப்பட்ட மற்றும் செயற்கை உணவுகள் ஆக்கிரமித்திருக்கின்றன. பீட்சா, பர்கர் உள்ளிட்ட பாஸ்ட்புட் உணவுகள் குழந்தைகள் முதல் பெரியவர்களின் பிரதான உணவாக மாறியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணவை சமைக்க போதிய நேரம் எடுத்துகொள்ளாமை, சீக்கிரம் உணவுகளை தயாரித்துவிட வேண்டும் என்ற எண்ணமே மக்களை துரித உணவுகளை நோக்கி ஓட வைத்திருக்கிறது. இந்த நொடி நேரம் ஓட்டம் தான் மக்களை வாழ்நாள் முழுவதும் மருத்துவமனைகளில் பெரும்பாலான நேரத்தையும் கழிக்க வைக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள உணவை தினசரி வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளும்போது கொழுப்பு கல்லீரல் நோய் தவிர்க்க முடியாத நோயாக பலருக்கும் மாறி உள்ளது. இதுதவிர கல்லீரல் நோய்க்கான மற்ற காரணிகளை பார்க்கலாம்.


மேலும் படிக்க | 120 கிலோவில் இருந்த பெண் மருத்துவர்... வெயிட் லாஸ் செய்தது எப்படி? - வைரலாகும் டிப்ஸ்


ஆல்கஹால்


கொழுப்பு கல்லீரல் நோய் வருவதற்கு ஆல்கஹால் பழக்கமும் ஒரு காரணம். மதுவை அதிகப்படியாக உட்கொள்ளும்போது  கல்லீரலின் செயலாக்க திறனை ஆல்கஹால் சிதைக்கிறது. இது கல்லீரல் சேதத்திற்கு வழிவகுத்து ஹெபடைடிஸ் மற்றும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி பிரச்சனைகளின் மூலமாகிறது. 


மன அழுத்தம் 


கண்ணுக்கு தெரியாத மன அழுத்தம் கல்லீரல் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கிறது. போட்டித் தேர்வுகள், வேலை அழுத்தங்கள், தூக்கமின்மை போன்றவற்றால் ஏற்படும் அதிக மன அழுத்தத்தால், மன அழுத்த ஹார்மோன்களின் வெளியீட்டை உடலில் அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன்கள் இதய நோய், நீரிழிவு மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்ற பிரச்சனைகளை உருவாக்குகின்றன. அதிக மன அழுத்தம் உள்ள நபர்களுக்கு கொழுப்பு கல்லீரல் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, குறிப்பாக ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


உடற்பயிற்சி இல்லாமை


உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி இல்லாமை ஆகியவையும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு வழிவகுக்கின்றன. பல மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கும்போது உடல் செயல்பாடுகள் அறவே இருக்காது. இந்த வாழ்க்கை முறை நீரிழிவு நோய், இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இறுதியில் கொழுப்பு கல்லீரல் போன்ற வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பிரச்சனைகளை  உருவாக்கின்றன. வாரத்தில் ஐந்து நாட்கள் குறைந்தது 45 நிமிட உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.


கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு வரமால் தடுக்க வேண்டும் என்றால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே தவிர்த்துவிட வேண்டும். வீட்டில் நன்கு சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரைகள் உணவில் அதிகம் இருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதை கவனித்து அதிகமாக குடிக்க வேண்டும். மன அழுத்தத்தை போக்க தியானம், யோகா ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், தினமும் குறைந்தது 45 நிமிட உடற்பயிற்சியை செய்தால் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையும் மாறி ஆரோக்கியமாக வாழலாம். 


மேலும் படிக்க | கர்ப்பிணிகளின் பிட்னஸ் & டயட்... தீபிகா படுகோனின் அறிவுரைகள் - முக்கியமான 4 விஷயங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ