கர்ப்பிணிகளின் பிட்னஸ் & டயட்... தீபிகா படுகோனின் அறிவுரைகள் - முக்கியமான 4 விஷயங்கள்

Pregnancy Fitness And Diet Tips: கர்ப்ப காலத்தில் தனது ஃபிட்னஸ் மற்றும் டயட் ஆகியவை குறித்து நடிகை தீபிகா படுகோனின் பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 19, 2024, 04:19 PM IST
  • தீபிகா படுகோன் தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார்.
  • பிப்ரவரி மாதம் தீபிகா படுகோன் தான் கருவுற்றிருப்பதாக அறிவித்தார்.
  • செப்டம்பரில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்ப்பிணிகளின் பிட்னஸ் & டயட்... தீபிகா படுகோனின் அறிவுரைகள் - முக்கியமான 4 விஷயங்கள் title=

Pregnancy Fitness And Diet Tips: பிரபல பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோன் (Deepika Padukone) அவரது அசாத்திய நடிப்பிற்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரின் துணிச்சலான நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்றவர். ஆண் மைய பாலிவுட்டில் தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கிய பெருமைக் கொண்ட தீபிகா படுகோன் தற்போது கர்ப்பமாக உள்ளார். 

ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் இணையர் வரும் செப்டம்பரில் குழந்தையை பெற்றெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், பெரிதாக பொதுவெளியில் இருந்து மறைந்திருந்த தீபிகா படுகோன்  சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வில் கம்பீரான சிவப்பு நிற சூட் உடன் கலந்துகொண்டு அதன் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டார்.

டயட் முக்கியமானது...

இந்நிலையில், தீபிகா படுகோன் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது ஃபிட்னஸ் மற்றும் டயட் குறித்து குறிப்பிட்டுள்ளார். 38 வயதான தீபிகா படுகோன் ஃபிட்னஸில் மிகுந்த கவனம் கொண்டவர். அந்த வகையில், தற்போதைய கர்ப்ப காலத்திலும் அவர் எப்படி அதே ஃபிட்னஸ் உடன் இருக்கிறார் என்பது குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஆரோக்கியமான டயட்டே அவரது பிட்னஸிற்கு காரணம் என அந்த நீண்ட பதிவில் குறிப்பிட்டிருந்த அவர், சமநிலையான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்வதும், அதனை தொடர்ச்சியாக சாப்பிடுவதும், உங்களின் உடல் சொல்வதை கவனித்து செயல்படுவதுமே ஆரோக்கியமான பிட்னஸ் மற்றும் டயட் முக்கியமானது என்கிறார்.

மேலும் படிக்க | முடி நன்றாக வளர வேண்டுமா? இந்த 5 சைவ உணவுகளை சாப்பிட்டால் போதும்!

டயட் என்றால் என்ன?

மேலும் அவரது பதிவில், "டயட் என்பது பட்டினிக் கிடப்பதோ, குறைவாக சாப்பிடவதோ அல்ல. டயட் என்ற வார்த்தையின் பொருளே ஒரு தனிநபர் என்ன சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்பதுதான்" என்றார். அதாவது, டயட் என்பது விரதம் இருப்பது என தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். டயட் என்பதை உங்களின் உணவுப் பழக்கவழக்கம் என புரிந்துகொள்வது நலம் என்கிறார். 

கிரேக்கத்தின் Diatia என்ற சொல்லில் இருந்தே ஆங்கிலத்தில் Diet என்ற சொல் வந்ததாகவும், கிரேக்கத்தில் அந்த சொல்லின் பொருளான 'வாழ்வின் பாதை' என்பதுதான் என்கிறார் தீபிகா படுகோன். மேலும் அவர்,"எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து நான் சமச்சீரான ஊட்டச்சத்தை கொண்ட டயட்டையே பின்பற்றி வருகிறேன். அது எனது 'வாழ்வின் பாதை' ஆகும்.

இந்த நான்கு விஷயங்கள்

என்னால் ஒத்துப்போக முடியாத அல்லது கவர்ச்சிக்கரமான டயட்டை நான் பின்பற்றியதே இல்லை. நீ என்ன சாப்பிடுகிறாயோ, அதாகவே மாறுவாய் என்ற சொற்றொடரை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் இருந்து நான் கற்றுக்கொண்ட ஒன்று என்றால் அந்த வார்த்தைகளில் மெய்யானது அல்ல என்பதுதான்..." என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

அதாவது இதன்மூலம், தனது ஃபிட்னஸ் மற்றும் டயட் குறித்து அவர் விவரித்துள்ளார். தேவைப்படும்பட்சத்தில் நிபுணர்களை தொடர்புகொண்டு சந்தேகங்களையும், விளக்கங்களையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். தீபிகா படுகோன் சொல்வதை போல், கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான வாழ்வுக்கும், முறையான ஃபிட்னஸை பெறவும் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளை இங்கு காணலாம். 

தண்ணீர் குடிப்பது

கர்ப்ப காலத்தில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமானது. குறைந்தபட்சம் தினமும் 8 கப் அளவிற்கு நீராகாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அது தண்ணீராகவும் இருக்கலாம், பால் ஆகவும் இருக்கலாம், மூலிகை டீயாகாவும் இருக்கலாம். நீர் சத்துடன் இருப்பதே மலச்சிக்கல், வீக்கம் மற்றும் பிற கர்ப்ப கால அசௌகரியங்களுக்கான தீர்வாக அமையும். 

சமச்சீரான உணவு

குழ்தையின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி கர்ப்பமாகியிருக்கும் பெண்ணின் உடல்நலத்திற்காகவும் அவர் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும். உடலுக்கு தேவையான புரதம், காம்ப்ளக்ஸ் கார்போஹைரேட்ஸ், வைட்டமின்ஸ், கனிமங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். மெலிந்த இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், பருப்புகள், முழு தானியங்கள், பால் சார்ந்த பொருட்கள், முட்டை ஆகியவை மேற்சொன்ன ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளன.

உடல் சொல்வதை கேளுங்கள்

பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கடினமான அனுபவங்களை ஒருங்கே தரக்கூடிய காலகட்டமாகும். நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னும், உங்களின் உடல் சார்ந்த நடவடிக்கைக்கும் பின்னும் உடல் எவ்வாறு இயங்குகிறது என்பதை கூர்ந்து கவனிப்பது அவசியம். உங்களின் டயட் மற்றும் உடற்பயிற்சிகளை உங்களின் உடல்நிலை மற்றும் சௌகரியத்திற்கு ஏற்ப கடைபிடிப்பதே நல்லது. 

உடற்பயிற்சி

மிதமான நடைபயிற்சி, கர்ப்ப காலத்திற்கு ஏற்ற யோகாசனங்கள் ஆகியவை கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பல்வேறு நன்மைகளை தரும். இதனால் உங்களின் உடல்நிலை மட்டுமின்றி மனநிலையும் சீராகும். எப்போதும் எனர்ஜியாகவும் இருப்பீர்கள், தூக்கமும் நன்றாக வரும். கடைசி டெலிவரி காலங்களில் இது உங்களுக்கு நிச்சயம் கடைக்கொடுக்கும். 

(பொறுப்பு துறப்பு: கர்ப்ப கால டயட் மற்றும் ஃபிட்னஸ் குறித்து தீபிகா படுகோனின் பதிவை இங்கு குறிப்பிட்டது தங்களின் புரிதலுக்கே அன்றி அதனை பரிந்துரைப்பதற்கு அல்ல. மேலும், டயட், ஃபிட்னஸ் மற்றும் உடற்பயிற்சிகள் சார்ந்த சந்தேகங்கள் மற்றும் யோசனைகளுக்கு நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் அதனை கடைபிடிக்கவும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | உங்கள் உடலுக்கு இந்த காரணங்களுக்காக வைட்டமின் பி12 கண்டிப்பாக தேவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News