Allu Arjun Diet And Fitness Routine For Weight Loss : நம்மில் பலர், படங்களில் நடிக்கும் நடிகர்கள் போல உடலை சரியாக பராமறிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருப்போம். ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியாது. சமீபத்தில் அல்லு அர்ஜுன் தனது உடல் எடையை பராமரிப்பது குறித்த ஒரு நேர்காணலை கொடுத்திருந்தார். அந்த தகவல்கள் இப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அல்லு அர்ஜுன்: 


தென்னிந்திய திரை உலகில் பிரபலமாக இருக்கும் நடிகருக்குள் ஒருவர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது இந்திய அளவில் பெரிய ஸ்டார் ஆக உயர்ந்திருக்கிறார். காரணம், இவர் நடித்திருக்கும் புஷ்பா 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனுக்கு தற்போது 42 வயது ஆகிறது. இந்த வயதிலும் இவர் தனது உடலை இளைஞனின் இருக்குமாறு பராமரித்து வருகிறார். இதற்காக இவர் பின்பற்றும் டயட் மற்றும் ஒரு உடற்பயிற்சி குறித்து இங்கு பார்ப்போம். 


டயட்: 


அல்லு அர்ஜுன், ஒரு தனது டயட் குறித்து பேசியபோது, அவர் தன் நாளை முட்டைகளை சாப்பிட்டு ஆரம்பிப்பதாக கூறியிருக்கிறார். அதிலும், தினந்தோறும் முட்டை இருக்கும் உணவைதான் எடுத்துக்கொள்வதாக அவர் கூறியிருக்கிறார். இருப்பினும் இரவில் தனக்கு பிடித்ததை விரும்பி சாப்பிடுவதாக தெரிவித்திருக்கிறார். வெளி உணவுகளை தவிர்க்கும் இவர், வீட்டில் சைத்த உணவுகளை மட்டும் சாப்பிடுகிறாராம். 


உடற்பயிற்சி:


அல்லு அர்ஜுன், தனது உடலை சரியாக பார்த்துக்கொள்ள உடற்பயிற்சிகளையும் செய்கிறார். குறிப்பாக அவர் செய்யும் ஒரு உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி ஆகும். இவர், வெறும் வயிற்றில் தினமும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஓட்டப்பயிற்சி செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்படி இல்லை என்றால் கலிஸ்தெனிக்ஸ் (calisthenics) எனும் பயிற்சியையும் செய்கிறார். இது, உயரத்தில் இருக்கும் கம்பை பிடித்து தொங்கும் உடற்பயிற்சியாகும். 


வெறும் வயிற்றில் ஓடுவதால் ஏற்படும் நன்மைகள்!


1.கொழுப்பை எரிக்கும்: 


வெறும் வயிற்றில் ஓடுவதால், உடலில்  இருக்கும் கொழுப்பு எரிவதாக கூறப்படுகிறது. இது, கலோரிகள் குறையை குறைவதுடன் உடல் எடையும் குறையுமாம்.


2.இன்சுலின்: 


தினமும் வெறும் வயிற்றில் ஓடுவதால், உடலின் இன்சுலின் சுரந்து உடல் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவும் குறியுமாம். இதனால் டைப் 2 டயாபிட்டீஸ் வராமல் தடுக்க முடியுமாம். 


3.ஹார்மோன் சுரப்பது: 


வேகமாக ஓடுவது உள்பட எந்த கார்டியோ உடற்பயிற்சியினை செய்தாலும் அது நமது ஹார்மோன் சுரப்பதற்கு உதவுவதாக கூறப்படுகிறது.  தசைகளை இவை தளர விட்டு, மெட்டபாலிசத்தையும் உருவாக்குமாம்.


மேலும் படிக்க | Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..


4.சரியான உடற்பயிற்சி:


பலருக்கு மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்ய ஏதுவான நேரம் கிடைக்காது. எனவே, வெறும் வயிற்றில் காலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது. இது, நம் உடலை சரியாக பராமரிக்கவும் காலையில் உடலுக்கான வேலைகளை முடித்து பிற வேளைகளை பார்க்கவும் உதவுகிறது. 


5.கவனச்சிதறல் இல்லாமல் இருப்பது: 


வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் ஒரு சிலருக்கு மனம் தெளிவாவதாக கூறப்படுகிறது. இதனால் கவனச்சிதறல் இன்றி ஒரு வேலையை பார்க்கவும், மனத்தெளிவு பிறக்கவும் இது உதவுகிறதாம். அதே போல, நாம் சாப்பிடும் உணவுகளும் சரியாக செரிமானம் ஆகலாம். 


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ