Nayanthara Weight Loss Tips : பிரபல நடிகையாக விளங்கும் நயன்தாரா, சில வருடங்களுக்கு முன்பு வரை உடல் எடை அதிகரித்தார் போல் இருந்தார். ஆனால், அதன் பிறகு ஆளே மாறிப்போனார். அவர் தன் ஃபிட்னஸை அப்படியே பேலன்ஸ் செய்ய என்ன சாப்பிடுகிறார் தெரியுமா?
Nayanthara Weight Loss Tips : தமிழில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர், நயன்தாரா. இவர், திரையுலகிற்கு வந்த புதிதில் உடல் எடை கொஞ்சம் அதிகரித்து இருந்தார். பின்னர் டயட்-உடற்பயிற்சி உள்ளிட்டவை மூலம் உடல் எடையை குறைத்தார். இதன் பிறகு அவர் அதே எடையை அப்படியே மெயிண்டெயின் செய்து வருகிறார். இதற்கு அவர் தினமும் ஒரு மேஜிக் பானத்தை குடிக்கிறாராம். அது என்ன தெரியுமா?
நயன்தாரா நடித்த கஜினி திரைப்படம் வந்த புதிதில் அவரை பலர் பயங்கரமாக உருவ கேலி செய்தனர். ஆனால் அடுத்து நடித்து பில்லா படத்திலேயே உடல் எடையை குறைத்து மாஸ் காட்டினார். அதிலிருந்தே அதே உடல் எடையையே பராமரித்து வருகிறார். இதற்கான சீக்ரெட் என்ன?
சரியான டயட்: நயன்தாரா தினசரி சரியான டயட்டை பின்பற்றி வருகிறார். சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், முழு தானியங்கள் என இவர் உணவு ஹெல்தியானதாக உள்ளது. அதே போல இவர் சர்க்கரை பானங்களை குறைத்துக்கொண்டதுடன், வெளி உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
நீர்ச்சச்த்து: உடல் எடை குறைவதற்கு உடற்பயிற்சி செய்வதுடன் சரியான தூக்கம் மற்றும் நம் உடலில் இருக்கும் நீர்ச்சத்தும் மிகவும் முக்கியம். எனவே, சரியாக தண்ணீர் குடித்து, பழச்சாறுகளை அருந்தி நீர்ச்சத்தினை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.
தினமும் குடிக்கும் பானம்: நயன்தாராவின் டயட்டில் முக்கிய அங்கமாக இருக்கிறது, இளநீர். இதை, அடிக்கடி காலையில் குடிக்கும் அவர், அவ்வப்போது தேங்காய் ஸ்மூதியும் குடிப்பாராம். தேங்காய் பாலில் ஏலக்காய், இலவங்கம் மற்றும் கொஞ்சமாக சர்க்கரையும் சேர்த்து குடிப்பாராம்.
உடற்பயிற்சிகள்: உடல் எடையை குறைக்க, டயட்டுடன் சேர்த்து உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதும் மிகவும் அவசியம். இதை கடைப்பிடிக்கும் நயன், ஸ்ட்ரெந்த் ட்ரெயினிங், யோகா, காலையில் ஓட்டப்பயிற்சி ஆகியவற்றை செய்கிறார். இவர் அவ்வப்போது ஜிம்மிற்கும் செல்வதாக கூறப்படுகிறது.
வீட்டில் சமைத்த உணவுகள்: நயன், தினமும் தன் வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துக்கொள்கிறாராம். அவை ஊட்டச்சச்த்து நிரம்பியதாக இருப்பதுடன், சுவையாகவும் இருப்பதாக கூறுகிறார்.
உடலுக்கு வேலைகள்: எடை குறைப்பிற்கு, நாம் உடற்பயிற்சியை தவிர இன்னும் சில விஷயங்களை செய்ய வேண்டியது அவசியம். தினமும் ஒரே இடத்தில் அமர்ந்திராமல், உடலுக்கு உழைப்பு தரும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும்.