மருத்துவத் துறையில் ஏராளமான மோசடிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக மக்கள் தினமும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மருந்துகளை (QR Code in Medicine) ஒரு மெடிக்கல் ஸ்டோரிலோ அல்லது ஆன்லைனில் வாங்கினால், அந்த மருந்து உண்மையானதா அல்லது போலியானதா என்பதை  அறிந்து கொள்வது கடினம். இப்பிரச்னைக்கு தீர்வு காண, தற்போது ஒரு புதிய முறை வகுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன்மூலம் 10 வினாடிகளில் மருந்து உண்மையானதா அல்லது போலியானதா என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். கடைக்காரர்கள் போலி மருந்துகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது அந்த மருந்தின் உண்மைத்தன்மையை நீங்கள் எளிதாக சரிபார்க்கலாம்.  


உண்மையில், மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஆக்டிவ் மருந்து மூலப்பொருள்-ஏபிஐகளில் QR குறியீட்டை வைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதன் கீழ், மருந்து விலை நிர்ணய ஆணையம் (Drug Pricing Authority DPA) 300 மருந்துகளுக்கு க்யூஆர் குறியீடு இடப்பட வேண்டும் என அறிவித்துள்ளது.


மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மருந்துகளின் விற்பனை மற்றும் விலையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. இதனுடன், மருந்துகளை பதுக்கி வைக்கும் கருப்பு சந்தைப்படுத்துதலும் தடுக்கப்படும். இந்த பட்டியலில் வலி நிவாரணிகள், வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கருத்தடை மருந்துகள்  ஆகியவை அடங்கும்.


தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தில், டோலோ (Dolo), சாரிடான் (Saridon), ஃபேபிஃப்ளூ (Fabiflu), ஈகோஸ்ப்ரின் (Ecosprin), லிம்சீ (Limcee), சுமோ (Sumo), கால்போல் (Calpol), கோரெக்ஸ் சிரப் (Corex syrup) அன்வாண்டட் 72  (Unwanted 72) மற்றும் தைரோனார்ம் (Thyronorm) போன்ற பெரிய பிராண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | Money Tips: 786 தொடரின் ரூபாய் நோட்டு இருந்தால் லட்சங்களை அள்ளலாம்


இந்த மருந்துகள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை மற்றும் காய்ச்சல், தலைவலி, வைரஸ், வைட்டமின் குறைபாடு, இருமல், தைராய்டு மற்றும் கருத்தடை ஆகியவற்றிற்கு வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவை ஆண்டு முழுவதும் அதிக அளவில் விற்பனையாகும் மருந்துகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மருந்துகளின் பட்டியல் சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே அவற்றை QR குறியீட்டின் கீழ் கொண்டு வர தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.



QR குறியீட்டைப் பயன்படுத்துவதன் மூலம், மருந்து தயாரிப்பதில் சூத்திரத்தில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளதா என்பதையும் கண்டறிய முடியும். இதனுடன், மூலப்பொருள் எங்கிருந்து வருகிறது, இந்த தயாரிப்பு எங்கே போகிறது. போன்ற அனைத்து தகவல்களும் கிடைக்கும். குறைந்த தரம், போலி மருந்துகளிளை உட்கொள்வதன் மூலம் மருந்தின் பலனை நோயாளி பெறுவதில்லை. அதனால்தான் QR குறியீடுகளை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


மேலும் படிக்க | Financial Tips: பணத்தை திட்டமிட்டு சேமித்து பணக்காரர் ஆக சில டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR