ராஷ்மிகா மந்தனா தகதகவென தங்க தேகத்துடன் மின்னுவதற்கு இதுதான் காரணம்..!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக விளங்கும் ராஷ்மிகா மந்தனாவின் பியூட்டி சீக்ரெட்ஸ்.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தனது துரு துரு பார்வைக்கும் பள பள தேகத்திற்கும் பிரபலமானவர். ராஷ்மிகாவின் அழகிற்கும் ஒல்லியான தேகத்திற்கும் காரணம் என்ன? இங்கே தெரிந்து கொள்வோம்.
நாயகிகள் பளபளவென மின்ன காரணம்:
சினிமாவில் நடிக்கும் நாயகிகள் பலர் எப்போதும் பளபள தேகத்துடன் மின்னும் உடலுடன் வலம் வருவர். இதற்கு காரணம், இவர்கள் எப்போதும் கேமராவில் இருக்க வேண்டும் என்பதால்தான். வழக்கமாக இயல்பு வாழ்க்கையில் பெண்கள் தங்கள் சருமத்தினை பாதுகாக்க எடுத்துக்கொள்ளும் உணவு முறைகளை விட இவர்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே கேர் எடுத்துக்கொள்வர். அவர்களுக்கென்று அழகு நிபுணர்களும் இருப்பதால் நடிகைகளை அழகாக காட்டுவது அவ்வளவு கடினமான காரியமாக இருக்காது. நாம் நாயகிகள் பின்பற்றும் வழிவகைகளை பின்பற்றினால், கண்டிப்பாக பலன் பெறலாம். ஆனால் அவர்கள் அளவிற்கு குறையே இல்லாத அழகாக இருக்க முடியாது.
மேலும் படிக்க | ‘இந்த’ 5 ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் நடக்காதாம்..!
சன்ஸ்க்ரீன் உபயோகிப்பது:
ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது தன மேக்-அப் சீக்ரெட்டுகளையும் சரும பொலிவுக்கான சீக்ரெட்ஸ்களையும் பகிர்ந்து கொண்டார். அப்போது தான் வெயிலில் செல்வதற்கு முன்பு கண்டிப்பாக சன்ஸ்க்ரீன் தடவுவதாக கூறினார். மேலும், அவர் எப்போதெல்லாம் பயணம் மேற்கொள்கிறாரோ அப்போதெல்லாம் சன்ஸ்க்ரீனையும் தன்னுடன் எடுத்துக்கொள்வாராம்.
சிகை அழகு:
சரும அழகு மட்டுமன்றி தனது சிகை அழகு குறித்தும் அவர் அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அதில், தனது பாட்டி தனக்கு சொல்லிக்கொடுத்த விஷயம் ஒன்றையும் அவர் பின்பற்றுவாராம். வீட்டில் இருக்கும் சமயங்களில் சூடாக காய்ச்சிய எண்ணெயை மிதமாக ஆறிய பிறகு தலையில் தேய்த்து ரிலாக்ஸ் செய்வாராம்.
மேக்-அப்:
ராஷ்மிகா மந்தனா, பட விழாக்கல் அல்லது படப்பிடிப்பு தவிர பல இடங்களில் இயற்கையான மேக்-அப் லுக்கில் இருப்பார். இது தனது முகத்திற்கும் எடுப்பாக இருப்பதாக அவர் கருதுகிறார். இவர், கலர் ஃபௌண்டேஷன் மற்றும் கன்சீலரை தன்னுடைய கழுத்து மற்றும் முகத்திற்கு உபயோகிக்க விரும்ப மாட்டாராம். இதை தனது கைக்கு உபயோகிப்பாராம். இதனால், முகத்திற்கு மேக்-அப் போடுகையில் கை வேறு கலரில் தெரியாமல் இருக்குமாம்.
அலர்ஜி டெஸ்ட்:
ராஷ்மிகா சில நாட்களுக்கு முன்னர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், சருமத்தை பாதுகாப்பதற்கு முதலில் அலர்ஜி டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதை தனது சொந்த அனுபவத்தில் இருந்து பேசுவதாகவும் அவர் கூறினார். ஏதாவது ஒரு புதிய மேக்-அப் பொருளை பயன்படுத்துகையில் ஏதேனும் வித்தியாசம் ஏற்பட்டால் கண்டிப்பாக அதை தோல் மருத்துவரிடம் சென்று காட்ட வேண்டுமாம். இவர் இன்னும் கொஞ்சம் டிப்ஸ்களையும் கொடுத்துள்ளார். அவை பின்வருமாறு:
1. சுத்தமான உணவுகளை சாப்பிடுங்கள். உடலுக்கு ஏற்றுக்கொள்வதை மட்டுமன்றி சருமத்திற்கு எது நண்மையோ அதையும் சாப்பிடுங்கள் என ராஷ்மிகா அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
2.சன்ஸ்க்ரீன் இல்லாமல் எப்போதும் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள். அதிகமாக துரித உணவுகளை சாபிட வேண்டாம், பால் சம்பந்தப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது கவனம் தேவை.
3. வைட்டமின் சி சீரம் பயன்படுத்துங்கள், இதை பயன்படுத்துவதற்கு முன்பு கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை கேட்க வேண்டும்.
4.மாய்ஸ்ட்ரைசரை உபயோகிக்கவும். இது, வறண்ட சருமத்தை சரி செய்ய உதவும். கண்கள் மற்றும் வாய்க்கு அருகில் உள்ள பகுதியை சுத்தப்படுத்த மறவாதீர்கள்.
மேலும் படிக்க | நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தாரக மந்திரம் ! சிரிப்பு அழகானது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ