Tamil Rasipalan 06 August 2021: இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி இருக்கும்
எப்படி இருக்கும் உங்கள் ராசிபலன்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? எந்த காரியம் எப்பொழுது செய்வது என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
எப்படி இருக்கும் உங்கள் ராசிபலன்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? எந்த காரியம் எப்பொழுது செய்வது என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
மேஷம்
குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகளில் உண்டாகும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் ஏற்படும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும்.
மிதுனம்
உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.
கடகம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முன்னோர்களின் சொத்துக்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகளும், ரகசியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகளும் உண்டாகும்.
சிம்மம்
புதுவிதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். செய்கின்ற தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.
கன்னி
முத்திரை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். மனதிற்கு பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கி முயற்சிக்கேற்ப வெற்றியும், பாராட்டுகளும் கிடைக்கும்.
துலாம்
உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இழுபறியான செயல்களையும் சாதுர்யமான முறையில் செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். வாழ்க்கைத்துணைவருடன் மேற்கொள்ளும் சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்களும், புத்துணர்ச்சியும் உண்டாகும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
விருச்சகம்
உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். அரசு தொடர்பான பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். நீண்ட நாள் கடன் தொடர்பான பிரச்சனைகளின் மூலம் மனதில் வருத்தங்கள் ஏற்படும். முக்கியமான கோப்புகள் மற்றும் பொருட்களில் கவனம் வேண்டும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.
தனுசு
கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு மறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். செய்யும் செயல்களில் இருந்துவந்த தடைகள் குறையும்.
ALSO READ | உணவில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!
மகரம்
உத்தியோகம் தொடர்பான நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். மாணவர்களுக்கு ஞாபகமறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். வாகனப் பயணங்களின்போது விவேகம் அவசியமாகும். போட்டித்தேர்வுகள் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.
கும்பம்
விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வாரிசுகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மேலும் அவர்களின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.
மீனம்
மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
ALSO READ | புத்திர பாக்கியம் இல்லையா; குழந்தை செல்வத்தை அருளும் திருவாலங்காடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR