புத்திர பாக்கியம் இல்லையா; குழந்தை செல்வத்தை அருளும் திருவாலங்காடு

திருக்கடையூர் அபிராமி அன்னையை நோக்கி பாடும் , அபிராமிபட்டர் கூட ‘கலையாத கல்வியும், குறையாத வயதும், கபடு வாராத நட்பும், என்ற பாடலை பாடும் போது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பற்றி பாடும் போது, ‘தவறாத சந்தானம்’ வேண்டும் என்கிறார்.   

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 18, 2021, 11:51 PM IST
  • திருவாலங்காடு என்ற பெயரில் இரண்டு திருத்தலங்கள் உண்டு.
  • ஒன்று திருவள்ளூர் அருகில் உள்ள, காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற தலமான திருவாலங்காடு.
  • மற்றொன்று திருவாவடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு.
புத்திர பாக்கியம் இல்லையா; குழந்தை செல்வத்தை அருளும் திருவாலங்காடு  title=

என்னதான் செல்வ செழிப்பு மிகுந்து இருந்தாலும், போட்ட கோலத்தை அழிக்க குழந்தை செல்வம் இல்லை என்றால், அதனால், ஏற்படும் ஏக்கம் வாட்டி வதைக்கத் தான் செய்கிறது. 

திருக்கடையூர் அபிராமி அன்னையை நோக்கி பாடும் , அபிராமிபட்டர் கூட ‘கலையாத கல்வியும், குறையாத வயதும், கபடு வாராத நட்பும், என்ற பாடலை பாடும் போது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பற்றி பாடும் போது, ‘தவறாத சந்தானம்’ வேண்டும் என்கிறார். சந்தானம் என்பது புத்திர பாக்கியத்தை குறிக்கும். எல்லாவற்றையும் சாதாரணமாக கேட்டவர், குழந்தைப்பேறு என்பதை மட்டும் தவறாமல் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டதில் இருந்தே, அதற்கான முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம். 

அந்த வகையில் குழந்தைப்பேறு அருளும் திருத்தலங்கள் அதிகமாக இருந்தாலும், திருவாலங்காடு வண்டார்குழலம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. ஏனெனில் இந்தத் திருத்தலம், ‘மலடிக்கும் குழந்தை செல்வத்தை கொடுக்கும்  என்கிறது  தல புராணம்.

ALSO READ | Culture: பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை பரிகாரம் செய்தால் போதுமா?

திருவாலங்காடு என்ற பெயரில் இரண்டு திருத்தலங்கள் உண்டு. ஒன்று திருவள்ளூர் அருகில் உள்ள,  காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற தலமான திருவாலங்காடு. மற்றொன்று திருவாவடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு. இந்த இரண்டு தலங்களிலும் உள்ள ஈசனின் திருநாமம் வடாரண்யேஸ்வரர் என்பதுதான். அதே போல் அம்பாளின் திருநாமமும் வண்டார்குழலம்மை என்பதே. இரண்டு தலங்களிலும் உள்ள எல்லை தெய்வத்தின் திருநாமமும் வடபத்திரகாளி அம்மன்.

நாம் இங்கு காண இருப்பது மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம். இங்கு வெளி சுற்று பிரகாரத்தில் புத்திரகாமேஸ்வரர் சன்னதி உள்ளது. இத்தல தீர்த்தம் ‘புத்திர காமேஸ்வர தீர்த்தம்’ ஆகும். காசியப முனிவரின் முதல் மனைவியான அதிதி தேவி, இந்த ஆலய தீர்த்தத்தில் நீராடி, வடாரண்யேஸ்வரரையும், புத்திர காமேஸ்வரரையும் வழிபாடு செய்ததன் பலனாகத்தான் புத்திர பாக்கியம் பெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்திரனும் கூட, தனது மகனான ஜெயந்தனை, புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடிதான் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

ALSO READ | Tripathi Balaji:  திருப்பதி தெய்வத்தின் சனிக்கிழமை பக்தி உலா

பரதன் என்னும் சிவபக்தன் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தினான். ஈசனை நோக்கி மனம் உருக  பிரார்த்தனை செய்தான், மன மகிழ்ந்த ஈசன், அவன் முன் தோன்றி, ஆண்டு தோறும் வரும் பங்குனி மாத அமாவாசை தினத்தில், திருவாலங்காடு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி எம்மை வழிபாடு செய்தால், மலடியும் குழந்தை பெறுவாள்” என்று அருளினார். அவ்வாறு வழிபாட்டதன் பயனாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர்.

இத்தலத்தில் வண்டார்குழலி அம்பாள் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி நாட்களில் இத்தல அம்பாள் சன்னிதியில் கருவறை தீபத்தில் தூய பசுநெய் சேர்த்து, அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செய்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபட நமது கோரிக்கைகள் யாவும் விரைவில் நிறைவேறும்.

பழைய வண்டார்குழலி அம்மன் அருகில், தனிச் சன்னிதியில் சரஸ்வதி உள்ளார். இத்தல சரஸ்வதி அம்மனுக்கு புனர்பூசம் நட்சத்திரம், பஞ்சமி திதி மற்றும் புதன் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டுவர குழந்தைகள் கல்வியில் சிறப்பாக விளங்குவர். 

ALSO READ | Coronavirus Temple: தெய்வத்துக்கும் மாஸ்க், பக்தர்களுக்கு பிரசாதமும் Mask

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News