நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பெரிதும் பயன்படும். அதன்படி சில நிபந்தனைகளின் கீழ், ரேஷன் கார்டை ஒப்படைக்க ஒரு விதியை அரசு விதித்துள்ளது. மேலும் இந்த புதிய விதிகளை நீங்கள் புறக்கணித்தால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். இது மட்டுமின்றி, உங்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகுதியுள்ள கார்டுதாரர்களுக்கு ரேஷன் கிடைப்பதில்லை
கொரோனா தொற்றுநோய் காலத்தில், ஏழைக் குடும்பங்களுக்கு அரசாங்கம் இலவச ரேஷன் வழங்கத் தொடங்கியது. ஏழைக் குடும்பங்களுக்கு அரசால் தொடங்கப்பட்ட இந்த உதவி திட்டம் இன்னுமும் நடைமுறையில் இருக்கிறது. 


மேலும் படிக்க | LIC IPO முக்கிய அப்டேட்: ஏப்ரல் மாத இறுதியில் ஐபிஓ வெளிவரக்கூடும்


இந்த நிலையில் தற்போது பல ரேஷன் கார்டுதாரர்கள் தகுதியில்லாமல், இலவச ரேஷனை பயன்படுத்தி வருவது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. அதே சமயம், இத்திட்டத்திற்கு தகுதியான பல கார்டுதாரர்களுக்கு அதன் பலன் கிடைக்கவில்லை. அத்தகைய சூழ்நிலையில், தகுதியில்லாதவர்கள் ரேஷன் கார்டை உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தகுதியில்லாதவர்கள் யாரேனும் ரேஷன் கார்டை ஒப்படைக்கவில்லை என்றால், விசாரணைக்குப் பிறகு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.



இலவச ரேஷன் யாருக்கு பொருந்தும்
ஒருவருக்கு 100 சதுர மீட்டருக்கு மேல் மனை, பிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம் அல்லது டிராக்டர் இருந்தால், குடும்ப வருமானம் கிராமத்தில் இரண்டு லட்சத்துக்கும், நகரத்தில் மூன்று லட்சத்துக்கும் மேல் இருந்தால், அத்தகையவர்கள் தங்களின் ரேஷன் கார்டை தாசில்தார் மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


அப்படி ரேஷன் கார்டை ஒப்படைக்காத பட்சத்தில், ஆய்வுக்கு பின், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசின் ரேஷனுக்கு தகுதியற்றவர்கள்
மோட்டார் கார், டிராக்டர், ஏசி, அறுவடை இயந்திரம், 5 கே.வி அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட ஜெனரேட்டர், 100 சதுர மீட்டர் நிலம் அல்லது வீடு, ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம், ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுத உரிமம், வருமான வரி செலுத்துபவர், குடும்ப வருமானம் கிராமப்புறங்களில் ஆண்டுக்கு 2 லட்சமும், நகர்ப்புறத்தில் ஆண்டுக்கு 3 லட்சமும் இருப்பவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, 13% டிஏ ஹைக் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR