புதுடெல்லி: இந்திய வங்கிகள் அமைப்பின் (IBA) வேண்டுகோளைத் தொடர்ந்து, குடும்ப ஓய்வூதியத்தில் திருத்தத்தின் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகளை 2021-22 முதல் தொடங்கும் 5 ஆண்டுகளில் எடுக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக நிதிநிலை அறிக்கைகளுக்கு பின்பற்ற வேண்டிய கணக்கியல் கொள்கையை வங்கிகள் வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.


இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) கோரிக்கைக்குப் பிறகு இந்த விலக்கு அளிக்கப்பட்டது. குடும்ப ஓய்வூதியத்தை திருத்துவது தொடர்பான நிதி ஏற்பாடுகளை ஒரு ஆண்டுகாலத்தில் செய்வது சில வங்கிகளுக்கு கடினமாக இருக்கும் என்று  இதில் கூறப்பட்டுள்ளது. 


விதிகள் திருத்தப்பட்டன


நவம்பர் 11, 2020 தேதியிட்ட 11 வது இருதரப்பு தீர்வு மற்றும் கூட்டு குறிப்பின் ஒரு பகுதியாக வங்கிகளின் ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் (Family Pension) திருத்தப்பட்டது. இந்த விவகாரங்கள் ஒழுங்குமுறை பார்வையில் இருந்து ஆராயப்பட்டதாகவும், ஒரு விதிவிலக்கான வழக்காக, மேற்கண்ட தீர்வின் கீழ் வரும் வங்கிகள் இந்த விஷயத்தில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


ALSO READ: வங்கி லாக்கர் புதிய விதிகள்; 'இந்த' காரணத்திற்காக லாக்கரை வங்கிகள் உடைக்கலாம்..!!


வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தில் அதிகரிப்பு


குறிப்பிடத்தக்க வகையில், ஆகஸ்ட் மாதத்தில், வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவிகிதம் அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்தது. அதாவது, இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஊழியர்களுக்கு முந்தைய ஓய்வூதியத்தை விட 30 சதவீதம் அதிகமாக குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும். 


குடும்ப ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வங்கி சங்கம் குடும்ப ஓய்வூதிய அதிகரிப்பு தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி ஒரு முன்மொழிவை அரசுக்கு முன்வைத்தது. அந்த கோரிக்கை அரசால் ஏற்கப்பட்டது. இந்த முடிவுக்குப் பிறகு, வங்கி ஊழியரின் கடைசி சம்பளத்துடன் 30 சதவிகிதம் சேர்ந்து குடும்ப ஓய்வூதியமாக கிடைக்கும்.


அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால், ஒவ்வொரு வங்கி ஊழியர்களின் (Bank Employees) குடும்பங்களுக்கும் ரூ .30,000 முதல் ரூ .35,000 வரையிலான கூடுதல் நன்மை கிடைக்கும். அதாவது, வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு முன்னர் கிடைத்த குடும்ப ஓய்வூதியத்தை விட இப்போது 30,000-35,000 ரூபாய் அதிகமாகக் கிடைக்கும்.


ALSO READ: வங்கி ஊழியர்களுக்கு Good News; இனி அதிக ஓய்வூதிய பலன்கள், அதிக குடும்ப ஓய்வூதியம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR