Card Tokenisation Rules: ஜனவரி 1, 2022 முதல், கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் முறை மாறவுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தரவு சேமிப்பு தொடர்பான டோக்கனைசேஷனுக்கான விதிகளை வெளியிட்டுள்ளது. இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். இதில், கார்ட் வைத்திருப்பவரின் தரவின் தனியுரிமை குறித்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்ட் பேமண்ட் சிஸ்டம் இனி எப்படி இருக்கும்?


ஜனவரி 1 முதல், வாடிக்கையாளர் தனது கார்ட் விவரங்களை எந்த மூன்றாம் தரப்பு செயலியுடனும் (Third Party App) பகிர வேண்டியதில்லை. உதாரணமாக, சோமாடோ (Zomato) போன்ற உணவு விநியோக செயலிகளுடனோ அல்லது ஓலா, ஊபர் போன்ற கேப் சேவைகளுடனோ வாடிக்கையாளர்கள் இனி தங்கள் கார்ட் விவரங்களை பகிர வேண்டிய தேவை இருக்காது.


தற்போது உள்ள செயல்முறையின் படி, இந்த செயலிகளில் வாடிக்கையாளர்களின் கார்டின் முழுமையான விவரங்கள் சேமிக்கப்படுகின்றன. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மோசடிகளுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது.


ஆனால் டோக்கனைசேஷன் அமைப்பு அத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. இந்த சேவையை எடுக்கலாமா வேண்டாமா என்பது வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பொறுத்ததாக இருக்கும். இதை எடுத்துக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படாது. வங்கிகள்/கார்டு வழங்கும் நிறுவனங்களும் இந்த செயல்முறையை கட்டாயமாக்காது.


ALSO READ: RBI எச்சரிக்கை: பழைய நாணயம், ரூபாய் நோட்டுகளை விற்பவர்கள் கவனத்திற்கு, இதில் கவனம் தேவை!!


கார்ட் டோக்கனைசேஷன் விதிகள் என்ன


ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிகளின்படி, ஜனவரி 1, 2022 முதல், கார்ட் வழங்கும் வங்கி அல்லது கார்ட் நெட்வொர்க் தவிர வேறு எந்த அமைப்பும் கார்டின் தரவுகளை சேமிக்க முடியாது. இவற்றில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளும் நீக்கப்படும்.


இருப்பினும், பரிவர்த்தனை கண்காணிப்பு அல்லது நல்லிணக்க நோக்கங்களுக்காக, நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட தரவை சேமிக்கலாம். கார்ட் எண் மற்றும் கார்ட் வழங்குபவரின் பெயரின் கடைசி நான்கு இலக்கங்கள் வரை சேமித்து வைக்க அனுமதிக்கப்படும்.


மடிக்கணினி, ஸ்மார்ட்வாட்சிலிருந்து பணம் செலுத்துவதற்கும் விதிகள் பொருந்தும்


கார்ட் (Cards) நெட்வொர்க்குகள் விதிகளைப் பின்பற்றுவதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். CoFT மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றின் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.


டோக்கன் சேவை வழங்குநர் வழங்கும் கார்டுகளுக்கு மட்டுமே டோக்கனைசேஷன் வசதி வழங்கப்படும். கார்ட் தரவை டோக்கனைஸ் மற்றும் டி-டோக்கனைஸ் செய்யும் வசதி அதே டோக்கன் சேவை வழங்குநரிடம் இருக்கும். வாடிக்கையாளரின் ஒப்புதலுடன் கார்ட் தரவின் டோக்கனைசேஷன் செய்யப்படும்.


ALSO READ: RBI New Rule: Cheque கொடுக்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள், மீறினால் அபராதம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR