UPI Payment Limit: நீங்கள் UPI பேமெண்ட்டையும் பயன்படுத்தினால், உங்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. நாட்டின் கோடிக்கணக்கான பயனர்களை பாதிக்கும் UPI பேமென்ட் சிஸ்டத்தில் விரைவில் ஒரு பெரிய மாற்றம் நிகழப் போகிறது. இதில் ஏற்படும் அந்த மாற்றம் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யுபிஐ பேமெண்ட் 


UPI கட்டணச் சேவையின் சேவையை வழங்கும் செயலிகளுக்கு ஒவ்வொரு நாளும் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு விரைவில் வரம்பு விதிக்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) நாட்டின் மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர்களின் (TPAP) அளவு வரம்பை 30 சதவீதமாகக் கட்டுப்படுத்தத் தயாராகி வருகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு புத்தாண்டில் எக்கச்சக்க பரிசுகள்


ரிசர்வ் வங்கியுடன் பேச்சு வார்த்தை


இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்குப் பிறகுதான், Phone Pay, Google Pay மற்றும் Paytm போன்ற நிறுவனங்கள் அதன் வரம்பை சரிசெய்ய முடியும், இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் ஆரம்பத்தில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இதற்கு எவ்வளவு வரம்பு விதிக்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.


டிசம்பர் 31க்குள் முடிவு எடுக்கலாம்


இந்த நேரத்தில் NPCI அனைத்து வகையான மதிப்பீட்டையும் செய்கிறது. டிசம்பர் 31ம் தேதிக்குள் இது குறித்து முடிவெடுக்கலாம் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. 


வங்கிகள் தினசரி வரம்பு


UPI-ன் தினசரி வரம்பு வங்கியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், SBI UPI பரிவர்த்தனையின் ஒரு நாள் வரம்பை 1 லட்சமாக வைத்துள்ளது. மறுபுறம், தனியார் துறையின் ஐசிஐசிஐ வங்கியைப் பற்றி பேசுகையில், அதன் வரம்பு ரூ.10,000.


மேலும் படிக்க | ரயில்வே டிக்கெட் ஏஜெண்டை ஓவர் டேக் செய்து டிக்கெட்டை கன்பார்ம் பண்ணுங்க! ஐஆர்சிடிசி டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ