Relationship Latest News Tamil : அன்போடு பழகி காதல் உறவில் அடியெடுத்து வைக்கும்போது சிலர் எமோஷ்னல் பிளாக்மெயில் என்ற உறவுச் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். அது ஒருவரின் தனிப்பட்ட மனநிலையையும் பாதிக்கிறது என்பதால், சிலர் இத்தகைய உறவில் இருந்து வெளியேறிவிடலாமா? என்று கூட சிந்திக்கிறார்கள். சிலர் எமோஷ்னல் பிளாக்மெயிலில் சிக்கித் தவிக்கிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாமல் தினம் தினம் உறவுச் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். ஆண், பெண் என இருபாலருக்குமே இந்த பிரச்சனை பொதுவானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதனால், மனசுக்கு சந்தோஷத்தை கொடுக்காமல் தொடரந்து வலிகளை மட்டுமே கொடுக்கும் எந்த உறவும் ஆரோக்கியமானது அல்ல என்பதால் அப்படியான உறவுகளில் இருந்து வெளியேறிவிடுவதே சிறந்தது. இருப்பினும் அதற்கு நீங்கள் எமோஷ்னல் பிளாக் மெயிலில் சிக்கித் தவிக்கிறீர்கள் என்பதை அறிய வேண்டும் அல்லவா?. அதனை காட்டும் அறிகுறிகளை பார்க்கலாம். 


1. உங்கள் காதலன் அல்லது காதலி எப்போதும் அவர்களின் பிரச்சனைகளை மட்டுமே தொடர்ந்து பேசுகிறார். பாசமாக கூட உங்களை பரஸ்பரம் விசாரிப்பதில்லை. உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல், நீங்கள் மட்டுமே அவருக்காக எப்போதும் அன்பு, பாசம், பரிவை காட்ட வேண்டும் என்ற நிலையிலேயே வைத்திருக்கிறார் என்றால், நீங்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். 


மேலும் படிக்க | சந்தோஷத்தை பணம் கொடுத்தும் வாங்கலாம்... ஹேப்பியாக இருக்க நறுக் டிப்ஸ் இதோ!


2. உங்கள் காதலன் அல்லது காதலியுடன் மேற்கொள்ளும் உரையாடல் முடிந்தவுடன் மகிழ்ச்சியாக உணர்கிறீர்களா? அல்லது கவலை, சோகம் ஆட்கொள்கிறதா? என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் அவரின் சோகங்களுக்காக உங்களை எப்போதும் வருத்திக் கொண்டே இருப்பீர்கள் என்றால், உங்களின் காதல் வாழ்க்கையை சுய பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது. 


3. காதலன் அல்லது காதலியுடன் இருக்கும்போது உங்களை மெய்மறந்து மகிழ்ச்சியை அனுபவிக்கிறீர்கள் என்றால் அந்த உறவு பிரச்சனை இல்லை. சந்தித்துக் கொண்டாலே ஏதாவதொரு சிக்கலை பேசி அல்லது குறைகளைபேசி சண்டையும் சச்சரவுமாக இருந்தால் அந்த உறவு உங்களுக்கு ஆபத்தானதே. எல்லா நேரமும் மகிழ்ச்சியாகவே  இருக்க முடியாது என்றாலும், பழகிய நாட்களின் பெரும்பான்மை சூழலை கருத்தில் கொண்டு அந்த காதல் உறவு பற்றி முடிவெடுக்கவும். 


4. உங்கள் உணர்ச்சிகளுக்கு எப்போதும் மதிப்பிருக்காது, காதலன் அல்லது காதலி ஈஸியாக எடுத்துக் கொள்கிறார்கள். எப்போது எந்த விஷயத்தை சொன்னாலும் உங்களை மட்டம்தட்டுவது, உணர்வுகளை புறந்தள்ளி நகைப்பது என்று இருந்தால் நீங்கள் அந்த உறவில் நீடித்து இருக்க முடியாது. ஏனென்றால், நாளுக்கு நாள் குற்றவுணர்ச்சிக்குள் படிப்படியாக தள்ளப்படுவீர்கள். அது உங்களின் உடல்நிலைக்குகூட ஆபத்தை ஏற்படுத்தலாம். 


5. ஆரோக்கியமான உறவு என்பது பரஸ்பரம் மகிழ்ச்சியையும் சோகங்களையும் பகிர்ந்து கொள்வது மட்டுமின்றி, எந்தவொரு இடத்திலும் தேக்கம் அடையாமல் அனைத்து சங்கடங்களையும் கடந்து சென்று புத்துணர்ச்சியுடன் பயணிக்க வேண்டும். அப்படியான உணர்வை கொடுக்கும் வாழ்க்கைமுறை சுவாரஸ்யமானதாகவும், உங்களுக்கு மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். அப்படியான அனுபவங்கள் உங்கள் உறவில் கிடைக்கிறதா? என பார்க்கவும்.


எதிர்மறை எண்ணங்கள் கொண்ட உறவு முறையாக இருந்தால் அது ஆபத்து. ஆனால் மகிழ்ச்சியும், அன்பும், பரிவும் மற்றும் சின்ன சின்ன சிணுங்கல்களும் இருந்தால், நேர்மறையாக பயணிப்பது போன்ற உணவு இருந்தால், அந்த நல்லது. எனவே ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து முடிவெடுத்தால் உங்கள் வாழ்க்கை பயணம் மகிழ்ச்சியாக அமையும். எனவே, காதலே என்றாலும் எமோஷ்னல் பிளாக்மெயில்களில் சிக்கி அழகான வாழ்க்கையை இருட்டாக்கி கொள்ளாதீர்கள்.


மேலும் படிக்க |  இளமையிலேயே முதுமையான தோற்றமா... இந்த 6 பழக்கங்களை உடனே ஒழித்துக்கட்டுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ