உங்கள் மனைவி அல்லது காதலியிடம் இந்த விஷயத்தை மட்டும் கேட்க வேண்டாம்!
ஒரு உறவில் உங்கள் மனைவியோ அல்லது காதலியோ, அவர்களிடம் இந்த 5 விஷயங்களை நீங்கள் கேட்க கூடாது. அப்படி கேட்டால் உடனடியாக உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரிடும்.
Relationship Tips For Couples: ஒரு உறவு சுமூகமாக நீண்ட காலத்திற்கு இருக்க இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் தேவைகளை கவனித்துக்கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக உணர்ச்சியான தருணங்களில் உடன் இருக்க வேண்டும். இதனை செய்ய தவறும் பட்சத்தில் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்றைய உலகில் வலுவான உறவைப் பேணுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. காலப்போக்கில் உறவுகளில் பல ஏற்ற தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன. ஒருசில சமயங்களில் அந்த உறவு முடிவடையும் தருவாயில் இருப்பது போல் சிலருக்கு தோன்றும். இப்படிபட்ட சூழ்நிலையில், உறவைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற உறவுகளில் சிக்கிக்கொள்வதன் மூலம் மக்கள் பெரும்பாலும் தங்கள் மதிப்புகளை இழக்கிறார்கள்.
மேலும் படிக்க | உங்கள் குழந்தையை ஏசி அறையில் தூங்க வைப்பீங்களா? இந்த விஷயத்தில் கவனம்!
நேரம்
பெரும்பாலான மக்கள் காலப்போக்கில் தங்கள் மனைவி அல்லது காதலிக்கு உரிய நேரம் கொடுப்பதை நிறுத்துகிறார்கள், இது உறவில் விரிசல் அடைய முதல் காரணமாக அமைகிறது. இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், உங்கள் துணைக்கு நேரம் ஒதுக்குவது முக்கியமானது ஆகும். இது உறவின் அடித்தளத்தை பலப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே ஒருநாளில் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்குவது முக்கியம்.
கவனம்
உங்கள் மனைவி அல்லது காதலிக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் தான். ஆனால் அதிக கவனம் ஒருவித அழுத்தமாக மாறிவிடும். இது உறவில் விரிசல் அடைய காரணமாக அமையலாம். உங்கள் துணையுடன் இதைப் பற்றி நன்றாக விவாதிக்கவும். அதற்கு பிறகு உங்களது அணுகுமுறையை மாற்றுங்கள். ஒருசிலர் அதிக கவனம் வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஒரு சிலர் அதனை வெறுப்பார்கள். எனவே இந்த விஷயம் உங்களை உணர்ச்சி ரீதியாக பாதிக்கலாம்.
மரியாதை
உங்களுக்கான மரியாதையை நீங்கள் கேட்டு வாங்க வேண்டிய இடத்தில் ஒரு உறவை வைத்து கொள்ளாதீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனைவி அல்லது காதலி உங்களை மதிக்கவில்லை என்றால் அவரிடமிருந்து நீங்கள் பிரிந்து செல்வது நல்லது. நீங்கள் எவ்வளவு மரியாதை கொடுக்குறீர்களோ அவ்வளவு திரும்ப கிடைக்கும்.
அர்ப்பணிப்பு
உங்கள் மனைவி அல்லது காதலியிடம் நீங்கள் அர்ப்பணிப்பு கேட்க வேண்டும் என்றால், நீங்கள் தவறான நபருடன் உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், ஒரு உறவில் ஒருவரை பற்றி முழுமையாக தெரியாத பட்சத்தில் மட்டுமே அர்ப்பணிப்பு செய்ய பயப்படுகிறார்கள்.
விசுவாசம்
உங்களுடன் நேர்மையாக இல்லாத ஒரு துணையுடன் உங்கள் வாழ்க்கை வாழ முடியாது. உறவில் சந்தேகம் வந்துவிட்டால் அது மீண்டும் பழைய நிலைக்கு மாற வானவில்லை. உங்கள் நம்பிக்கையை மதிக்காத எவருடனும் உறவில் இருக்க வேண்டாம். ஏனெனில் விசுவாசம் என்பது கேட்கப்பட வேண்டிய ஒன்றல்ல. ஒவ்வொரு நபரும் ஒரு உறவில் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல திட்டமா? விசா தொடர்பான விதிகளில் மாற்றங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ