உங்கள் குழந்தையை ஏசி அறையில் தூங்க வைப்பீங்களா? இந்த விஷயத்தில் கவனம்!

Air Conditioner: பல வீடுகளில் ஏசி தற்போது அத்தியாவசிய பொருளாகிவிட்டது. குறிப்பாக கோடை காலத்தில் இதன் தேவை அதிகளவில் உள்ளது.  

 

1 /5

குழந்தைகள் ஏசி அறைகளில் தூங்குவது பொதுவானது என்றாலும், புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைப்பதற்கு முன் பல்வேறு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.   

2 /5

குறிப்பாக ஏசியின் வெப்பநிலையை செட் செய்யும் போது கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு அதிகமான குளிர் ஏற்படாமல் இருக்க சரியான வெப்பநிலையை வைக்க வேண்டும். 23 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வைத்துக் கொள்ளலாம்.   

3 /5

தூங்கும் போது உஷ்ணத்தை பராமரிக்க உங்கள் குழந்தைக்கு போதுமான அளவு போர்வை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குழந்தையின் முகம் உள்ளங்கால் அல்லது தலையில் நேரடியாக குளிர்ந்த காற்று வீசாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  

4 /5

குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது, எளிதில் வறண்டு போகும். எனவே நீண்ட நேரம் ஏசியால்  ஏற்படும் வறட்சியை எதிர்த்து போராட குழந்தையின் தோலில் எண்ணெய் அல்லது மாய்ஸ்ரைசரை பயன்படுத்த வேண்டும்.  

5 /5

கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம் குறிப்பாக மார்பு வயிறு, முதுகு பகுதியில் ஈரப்பதத்தை தக்க வைத்து குழந்தையை சூடாக வைத்திருக்க உதவும். குழந்தைகளுக்கு ஒவ்வாமை மற்றும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் தூசி அல்லது அழுக்கு சேர்வதை தடுக்க வாரம் ஒரு முறை ஏசியை சுத்தம் செய்ய வேண்டும்.